ஒட்டோ லோவி
ஒட்டோ லோவி Otto Loewi | |
---|---|
பிறப்பு | பிராங்க்ஃபுர்ட், செருமானியப் பேரரசு | சூன் 3, 1873
இறப்பு | திசம்பர் 25, 1961 நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 88)
தேசியம் | ஆஸ்திரியா, செருமனி, ஐக்கிய அமெரிக்கா |
துறை | மருந்தியல், நடத்தைசார் உயிரியல் |
கல்வி கற்ற இடங்கள் | ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | அசெட்டைல்கோலின் |
விருதுகள் |
|
துணைவர் | கைடோ கோல்ட்ஸ்மித் (தி. 1908; 4 குழந்தைகள்) (1889-1958) |
ஒட்டோ லோவி (Otto Loewi), சூன் 3, 1873 – திசம்பர் 25, 1961[4] என்பவர் செருமனியில் பிறந்த மருந்தியலாளர் மற்றும் உளவியலாளர் என அறியப்படுகிறார். இவருடைய கண்டுபிடிப்பான அசெட்டைல்கோலின் (Acetylcholine) எனும் கரிமச் சேர்மம் மருத்துவ சிகிச்சையை மேம்படுத்த உதவியதாக கருதப்படுகிறது. அக்கண்டுபிடிப்பிற்காக 1936-ல் அவருக்கு சர் ஹென்றி டேல் (Henry Hallett Dale) அவர்களுடன் உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.[5]
பிறப்பு
[தொகு]நடு ஐரோப்பாவில் உள்ள செருமனியின் பிராங்க்ஃபுர்ட் நகரில் 1873-ம் ஆண்டு, சூன்-மாதம் 3-ம் நாளில், ஒரு யூதக் குடும்பத்தில் ஓட்டோ பிறந்தார். அவரது தந்தை "யாக்கோபு லோவி" ( Jacob Loewi), ஒரு வியாபாரி தாயார் அண்ணா வில்ஸ்டாட்டர் ( Anna Willstätter) இல்லத்தரசி யாவார்.[6]
படிப்பு
[தொகு]ஓட்டோ, பள்ளிக் கல்விக்குப் பிறகு, 1891 ஆம் ஆண்டில் ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைகழகத்தில் (University of Strasbourg) ஒரு மருத்துவ மாணவராக சேர்தார். பின்பு, 1893-1894 ஆண்டுகளில் செருமனியின் எல்லையின் பிரான்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதியான அல்சேஸ் பிரதேசத்தின் ஸ்திராஸ்பூர்க் நகரிலுள்ள மூனிச் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மற்றும் கலை வரலாற்றையும் பயின்ற லோவி, தத்துவத் துறையிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். 1896-ம் ஆண்டு மருத்துவர் பட்டம் பெற்று ஸ்திராஸ்பூர்க் (Strasbourg) திரும்பிய அவர், மருத்துவ ஆய்வுகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.[7]
பணிகள்
[தொகு]கனிம பகுப்பாய்வு வேதியியல் பயின்ற ஓட்டோ லோவி, ஸ்திராஸ்பூர்க்கின் உயிரி வேதியியல் நிறுவனத்தில் பணியாற்றினார். பிராங்க்ஃபுர்ட்டில் ஒரு மருத்துவமனையில் ஓராண்டு காலம் மருத்துவராகப் பணிபுரிந் தவர், காச நோய் (Tuberculosis), நிமோனியா எனும் நுரையீரல் அழற்சி (Pneumonia) காய்ச்சலுக்கு முறையான மருந்துகள் இல்லாமல், சிகிச்சையின்றி இறப்பு விகிதம் அதிகரித்ததால் வேதனையடைந்தவர்.[8] பின்னாளில் மருத்துவராக இருப்பதை கைவிட்டு, மருந்தியலில் ஆய்வுகள் மேற்கொள்ள முடிவெடுத்தார். பிரபல மருந்தியலாளர் ஹான்ஸ் ஹோர்ஸ்ட் மேயரின் (Hans Horst Meyer) ஆய்வுக்கூடத்தில் உதவியாளராகப் பணியமர்ந்து, வளர்சிதை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 1904-ல் வியன்னாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[8]
ஆய்வுக்கட்டுரைகள்
[தொகு]விலங்குகள் உடலின் புரதத் தொகுப்பு (Protein synthesis) குறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்ட ஓட்டோ, சிறுநீரக செயல்பாட்டின் உடலியங்கியல் (Physiology), மருந்தியல் (Pharmacy) சோதனைகள் குறித்து தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியிட்டார்.[7] அதைத்தொடர்ந்து, மாச்சத்து வளர்சிதை (Carbohydrate metabolism) மாற்றங்களோடு தொடர்புடைய பிரச்சினைகளை ஆராய்ந்து தனது கண்டுபிடிப்புகள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டார்.[7]
கலந்தாய்வுகள்
[தொகு]1902-ல், ஓட்டோ லோவி லண்டன் எர்னஸ்ட் ஸ்டார்லிங் (Ernest Starling) என்பவரின் ஆய்வுக்கூடத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தபோது, ஆங்கில மருந்தியலாளரும் மற்றும் உடற்கூறு நிபுணருமான, சர் ஹென்றி ஹெல்லேத்ட் டேல் (Henry Hallett Dale) என்பவரை சந்தித்தார்.[5] அவர்கள் நெருங்கிய நண்பர்களாகினர். இருவரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். மீண்டும் நாடு திரும்பியவர், சிறுநீரக இயக்கம் குறித்த ஆய்வுகளைத் தொடர்ந்தார். 1905-ல் மெயர்ஸ் ஆய்வுக்கூடத்தில் (Meyers Lab) இணை பேராசிரியராகப் (Associate Professor) பொறுப்பேற்றார். ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் பல்கலைக்கழகத்தில் (University of Graz) மருந்தியல் துறை தலைமைப் பொறுப்பில் 1909-ல் நியமிக்கப்பட்டார்.[9]
நோபல்
[தொகு]நரம்புத் தூண்டுதல்களின் ரசாயனத் தாக்கங்கள், நரம்புநொதிகள் குறித்து கண்டறிந்த ஓட்டோ. இதன் தொடர்ச்சியாக மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களின் மத்திய நரம்பு மண்டலத்திலும் அதன் புற எல்லையிலும் காணப்படும் நரம்பியகடத்துகை (Neurotransmitter), அசிட்டைல்கோலைனை (Acetylcholine) கண்டறிந்தார். இதய பாதிப்புகள் குறித்த ஆய்வுகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதற்காக இவரது நண்பர் சர் ஹென்றி டேலுடன் இணைந்து இவருக்கு 1936-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.[5]
சோதனை
[தொகு]1936-ல் வழங்கப்பட்ட நோபல் பரிசு, ஆஸ்திரியாவில் ஜெர்மன் படைகள் ஊடுருவலால், இவரது நோபல் பரிசு, மற்றும் பரிசுத் தொகை உட்பட அனைத்து உடைமைகளும் 1938-ல் பறிமுதல் செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.[5]
சாதனை
[தொகு]1940-ல் நியூயார்க் பல்கலைக்கழக (New York University) அழைப்பை ஏற்று அங்கு சென்ற ஓட்டோ, மருந்தியல் துறை ஆராய்ச்சி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். மேலும், 1946-ல் அமெரிக்க குடியுரிமை பெற்று மனிதநேயம் மிக்கவர் என போற்றப்பட்டார். இசை, கட்டிடக்கலை, ஓவியம் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர். கண்காட்சி, மற்றும் அருங்காட்சியகங்களை விரும்பிச் சென்று பார்ப்பார்.[5]
இறப்பு
[தொகு]பல்வேறு அறிவியல் அமைப்புகளிடம் இருந்து ஏராளமான பட்டங்கள், பரிசுகள், பதக்கங்களைப் பெற்றவரும், அசெட்டைல்கோலின் (Acetylcholine) எனும் கரிமச் சேர்மத்தை கண்டறிந்தவரும், ‘நரம்பியல் அறிவியலின் தந்தை’ என போற்றப்படும் ஓட்டோ லோவி, ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள நியூயார்க் நகரில், 1961-ம் ஆண்டு திசம்பர் மாதம் 25-ம் நாளில் ( அவ்வாண்டின் கிறித்துமசு தினத்தன்று) தனது 88-வது அகவையில் மறைந்தார்.[7]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ Raju, T. N. (1999). "The Nobel chronicles. 1936: Henry Hallett Dale (1875-1968) and Otto Loewi (1873-1961)". Lancet 353 (9150): 416. doi:10.1016/s0140-6736(05)75001-7. பப்மெட்:9950485.
- ↑ Lembeck, F. (1973). "Otto Loewi--a scientist against his contemporary background (author's transl)". Wiener klinische Wochenschrift 85 (42): 685–686. பப்மெட்:4587917.
- ↑ Babskiĭ, E. B. (1973). "Otto Loewi (on the 100th anniversary of his birth". Fiziologicheskii zhurnal SSSR imeni I. M. Sechenova 59 (6): 970–972. பப்மெட்:4583680.
- ↑ 4.0 4.1 Henry Hallett Dale (1962). "Otto Loewi 1873-1961". Biographical Memoirs of Fellows of the Royal Society 8: 67–89. doi:10.1098/rsbm.1962.0006.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 "Otto Loewi - Biographical". www.nobelprize.org (ஆங்கிலம்). The Nobel Foundation 1936. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Biography of Otto Loewi by Xavier REZAI JMN2007.pdf|வலைக்காணல் சூன் 16 2016
- ↑ 7.0 7.1 7.2 7.3 "Otto Loewi Facts". biography.yourdictionary.com (ஆங்கிலம்) - 1996-2016. Archived from the original on 2017-07-01. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2016.
- ↑ 8.0 8.1 "Loewi, Otto". www.encyclopedia.com (ஆங்கிலம்). Complete Dictionary of Scientific Biography. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Dr. Otto Loewi Professor In the Department of Physiology". www.zoominfo.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.