உள்ளடக்கத்துக்குச் செல்

பொருட்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கண்காட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருட்காட்சி

உலகில் கண்டு வியக்கத்தக்க பொருட்கள் நாள்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.அவ்வாறு தோன்றும் புதிய பொருட்களைக் காணவும் வாங்கவும் வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர்.பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு பொருட்களையும் ஓர் இடத்தில் மக்கள் எளிதில் வந்து பார்க்கத் தகுந்த வகையில் அமைந்த பொது இடத்தில ஒழுங்கான முறையில் கவர்ச்சிக்கரமான முறையில் அமைத்து அவற்றை மக்கள் காணுமாறு செய்வதே பொருட்காட்சி ஆகும்.

நோக்கம்[தொகு]

மக்கள் பல புதிய பொருட்களைக் கண்டுகளித்து அவற்றைச் செய்வதற்கோ,தத்தம் தொழில் திறமையைக் காட்டிக் கொள்வதற்கோ,தத்தம் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கோ இத்தகைய பொருட்காட்சி அமைக்கப்படும்.வியாபாரம் காரணமாக நடத்தப்பெறும் பொருட்காட்சிகள் இன்று பெருகியுள்ளன.இத்தகைய பொருட்காட்சியை மதுரை,திருநெல்வேலி,சேலம் போன்ற நகரங்களில் அரசாங்கமே நடத்துகிறது.ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி காட்சி நடத்தும் முறையும் தோன்றி,இப்பொழுது விரிவடைந்துள்ளது.இம்முறையில் நடத்தப் பெறுபவை ஜவுளிக் கண்காட்சி,புத்தகக் கண்காட்சி முதலியவையாகும்.இவையெல்லாம் வியாபாரப் பெருக்கத்தின் பொருட்டே நடத்தப் பெறுவனவாகும்.

அமைப்பு[தொகு]

பொருட்காட்சி சாலை,நகரின் ஒரு புறத்தே அகன்ற இடத்தில தக்க பாதுகாப்போடு அமைக்கப்படும்.நகரின் நடுவே அத்தகைய இடம் இருக்குமானால்,அவ்விடத்திலும் அமைக்கப்படும்.அவ்வாறு அமைக்கப்படுகின்ற பொருட்காட்சி சாலை மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.அம்மின்சார விளக்கொளி கண்ணைப் பறிக்கும் கவினுடையதாக விளங்கும்.பொருட்காட்சி சாலையினுள்ளே செல்வதற்கு நுழைவுக்கட்டணம் உண்டு.அங்கு பலவகையான கடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு இது மிகவும் பயன்படும்.பல சினிமா படக் காட்சிகளும் நடைபெறும்.ஐந்தாண்டுத் திட்டங்களில் உருவாகும் செயல்களைப் படங்கள் வாயிலாகவும்,மாதிரிப்படிகளின் மூலமாகவும் அங்கு அதிகாரிகள் மக்களுக்கு காட்டி விளக்குவார்கள். புத்தம் புதிய விவசாயக் கருவிகள்,பொறுக்கு விதைகள்,எரு வகைகள் முதலியவற்றை,வேளாண்மைத் துறை அலுவலர்கள் மக்களுக்கு காட்டி விளக்கிக் கூறி,அவற்றை வாங்கச் செய்வார்கள்.ஒவ்வொரு கடையின் சிறப்பைப் பற்றியும்,பொருட்களின் சிறப்பைப் பற்றியும் ஒலிபரப்புவார்.அன்றாட நிகழ்ச்சிகள் பற்றியும்,ஒலிபரப்பப்படும்.பொருட்காட்சி சாலையில் இசை,நடனம்,நாடகம்,பேசும் படக்காட்சி முதலியவை சிறப்பு நிகழ்ச்சிகளாக அன்றாடம் நடைபெறும்.நோய் பரவும் முறை,அவற்றைத் தடுக்கும் முறை,குடும்பக் கட்டுப்பாடு முதலியவற்றைச் சுகாதார அதிகாரிகள் படம் மூலமாகவும் காட்டுவார்கள்;மக்களுக்கு விளக்கியும் கூறுவார்கள்.பொருட்காட்சி சாலை காலையிலும்,மாலையிலும் குறுப்பிட்ட நாட்கள் கால அளவு வரையே நடைபெறும்.

நன்மைகள்[தொகு]

பொருட்காட்சியினால் உண்டாகும் நன்மைகள் மிகப் பலவாகும்.பலவிடங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் ஓர் இடத்திலேயே கண்டுகளிக்கலாம்.புதிய கண்டுபிடிப்புகளையும்,புதிய புதிய பொருட்களையும் பார்த்து மகிழலாம்.அவற்றையெல்லாம் கண்டுகளிப்பதோடு நில்லாது,குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்கியும் கொள்ளலாம்.மக்களுடைய__ தொழிலாளர்களுடைய திறமையைப் பொருட்களைக் காண்பதன் மூலம் அறியலாம்:நாட்டின் முன்னேற்றத்தையும்,தொழில்களின் வளர்ச்சியையும் நன்கு அறியலாம்:காதால் கேட்டதையெல்லாம் நேரில் கண்டு அறியலாம்.பொருட்காட்சி சாலையில் பங்கு கொள்ளும் பல்வகைக் கடைகளுக்கும்,பிற நிலையங்களுக்கும் தக்க ஆதரவு தந்து உதவுவதோடு,அவற்றில் சிறந்து விளங்கும் கடைகளுக்கு நற்சான்றிதழும் பொற்பதக்கமும் அளித்து ஊக்குவிக்கப்படும்.இவ்வாறு செய்வதால்,பலரும் போட்டி மனப்பான்மையுடனும்,உற்சாகத்துடனும் பொருள் தயாரிப்பிலும்,விற்பனையிலும்,கடை அமைப்பிலும் நன்கு செயல்படுவார்கள்.

அரசாங்கமும்,நகராட்சி மன்றதரும் ஆண்டு தோரும் பொருட்காட்சி சாலையை நடத்தி,மக்களுக்குச் சிறந்த பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வழி செய்தல் வேண்டும்.தொழில் வல்லுநர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் காட்டவும் முன் வருதல் வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருட்காட்சி&oldid=3873361" இலிருந்து மீள்விக்கப்பட்டது