ஜேம்ஸ் ரோத்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேமுசு ரோத்மன்
பிறப்புநவம்பர் 3, 1950 (1950-11-03) (அகவை 73)
துறைஉயிரணு உயிரியல்
பணியிடங்கள்யேல் பல்கலைக்கழகம்[1]
கல்வி கற்ற இடங்கள்யேல் பல்கலைக்கழகம், ஆர்வடு பல்கலைக்கழகம்
விருதுகள்Louisa Gross Horwitz Prize (2002)
Albert Lasker Award for Basic Medical Research (2002)
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2013)

சேமுசு ரோத்மன் (James E. Rothman, பிறப்பு: நவம்பர் 3, 1950) யேல் பல்கலைக்கழகப் பேராசிரியரும் அப்பல்கலைக்கழகத்தின் உயிரணு உயிரியல் துறையின் தலைவரும், யேல் நானோ உயிரியல் நிறுவனத்தின் இயக்குநரும் ஆவார்.[2] மனித உயிரணுக்கள் உடலில் இடம்பெயர்வது குறித்து ஆய்வு செய்தமைக்காக 2013ஆம் ஆண்டின் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் ரேன்டி சேக்மன், தாமசு சி. சூடாப் ஆகியோருக்கும் அளிக்கப்பட்டது.[3] 1996 ஆம் ஆண்டு ஃபைசால் மன்னரின் பன்னாட்டுப்பரிசு (King Faisal International Prize) இவருக்கு 1996ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.[4] கொலம்பியா பல்கலைக்கழகத்தின் லூசியா குரோசு ஆர்விட்சு பரிசையும் ஆல்பெர்ட் இலாசிகர் பரிசினையும் 2002 ஆம் ஆண்டு இவர் பெற்றார்.

கல்வி[தொகு]

இவர் யேல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டமும் ஆர்வடு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர் ஆவார்.

ஆய்வு[தொகு]

உரோத்துமனின் (ரோத்மனின்) ஆய்வின் பயனாய் உடலில் உள்ள உயிரணுக்குள் நகரும் நுண்ணிய பை (vesicle) போன்ற உள்கூறுகள் தாம் எங்கு அடைய வேண்டும், எப்பொழுது அடைய வேண்டும், எப்பொழுது தான் தாங்கியிருக்கும் பொருள்களை வெளிவிடவேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த நுண்பைகள் (vesicles) இயக்குநீர், வளரூக்கிகள், மற்றும் பல மூலக்கூறுகளைத் தாங்கியிருப்பவை. இப்படியான உயிரணு உட்கூறுகளின் போக்குவரத்து உடலியக்கத்தின் பல செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றது. இந்த உயிரணுக்களின் உட்கூறுகளின் உள்போக்குவரத்து, உயிரணுக்களின் அடிப்படை உயிரணுப்பிளவில் இருந்து நரம்புகளோடும் மூளையோடும் தொடர்பு கொளவதிலும், இன்சுலின் போன்றவறற்றையும் பிற இயக்குநீர்களை வெளிவிடுவதையும், உணவின் சத்துகள் உறிஞ்சி உள்ளெடுப்பதுவும் போன்றவற்றுக்கு அடிப்படையாக இருப்பது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "James E. Rothman, Faculty: Yale Department of Chemistry". Chem.yale.edu. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2013-10-07.
  2. "James E Rothman". பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2013.
  3. "The Nobel Prize in Physiology or Medicine 2013". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் October 7, 2013.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-04-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_ரோத்மன்&oldid=3573387" இலிருந்து மீள்விக்கப்பட்டது