டேவிட் பால்டிமோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் பால்ட்டிமோர்
David Baltimore
Dr. David Baltimore2.jpg
2013 இல் டேவிட் பால்ட்டிமோர்
பிறப்புமார்ச்சு 7, 1938 (1938-03-07) (அகவை 85)
நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஉயிரியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
  • சுவாத்மோர் கல்லூரி (பிஏ)
  • ராக்பெல்லர் பல்கலைக்கழகம் (முனைவர்)
அறியப்படுவது
  • பால்ட்டிமோர் வகைப்பாடு
விருதுகள்
துணைவர்அலீசு உவாங் (1968; 1 பிள்ளை)
இணையதளம்
www.bbe.caltech.edu/content/david-baltimore
வெளி ஒளிதங்கள்
Nobel Prize Interview with Dr. David Baltimore, 26 April 2001, Nobel Prize.org
David Baltimore: Danger from the Wild: HIV, Can We Conquer It?, iBiology

டேவிட் பால்டிமோர் (David Baltimore, பிறப்பு 7 மார்ச் 1938) ஓர் அமெரிக்க உயிரியலாளரும் பல்கலைக்கழக ஆட்சியாளரும் ஆவார். இவர் 1975 இல் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றார். 1997 முதல் 2006 வரை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இப்போது அங்கு தகைமைத் தலைவராகவும் இராபெர்ட் ஆந்திரூசு மிலிக்கன் கட்டில் உயிரியல் பேராசிரியராகவும் இருக்கிறார். இவர் 1990முதல் 1991வரை இராக்பெல்லெர் பல்கலைக்கழகத் தலைவராகவும் இருந்துள்ளார். 2007இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக்கழகத்தின் தலைவரானார். முனைவர் பால்டிமோர் உலக அறிவியலில் பெருந்தாக்கத்தை விளைவித்துள்ளார். குறிப்பாக நோயெதிர்ப்பியல், நச்சுயிரியல், புற்றுநோய் ஆய்வு, உயிரித் தொழில்நுட்பம், மீளிணைவு டி. என். ஏ. ஆய்வு ஆகிய புலங்களில் ஆய்வாளராகவும் ஆட்சியாளராகவும் கல்வியாளராகவும் அறிவியல் சார்ந்த பொதுக்கொள்கையாளராகவும் பெரும்பங்களித்துள்ளார். இவர் பல முனைவர்பட்ட, முதுமுனைவர்பட்ட மாணவர்களை வழிநடத்தியுள்ளார். இவர்களில் பலர் பல்வேறு புலங்களில் பெயர்பெற்ற ஆய்வாளர்களக உள்ளனர். நோபல் பரிசு மட்டுமன்றி, இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1999இல் தேசிய அறிவியல் பதக்கம் பெற்றார். இவர் தற்போது பரிந்துரையாளர் வாரியத்தில் இருக்கிறார்[1].

இளம்பருவம்[தொகு]

விருதுகளும் தகைமைகளும்[தொகு]

  • வாரன் ஆல்பெர்ட் அறக்கட்டளைப் பரிசு (2000)
  • தேசிய அறிவியல் பதக்கம் (1999)
  • மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1975)
  • அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வாளர் (1974)
  • மூலக்கூற்று உயிரியலில் NAS விருது (1974)
  • கெயிர்டினர் பன்னாட்டு விருது (1974)
  • நச்சுயிரியலில் கசுத்தாவ் சுட்டெர்ன் விருது (1971)
  • வாரன் மூவாண்டுப் பரிசு (1971)
  • எலி லில்லி விருது, ஏமவியல், நுண்ணுயிரியலுக்கானது (1971)

சொந்த வாழ்க்கை[தொகு]

பால்டிமோர் 1968இல் மரு. அலைசு எசு. ஃஉவாங்கை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Board of Sponsors". Bulletin of the Atomic Scientists. Rachel Bronson. 2018-05-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-13 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_பால்டிமோர்&oldid=3642089" இருந்து மீள்விக்கப்பட்டது