ரொனால்டு ராஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் ரொனால்டு ராஸ்
பிறப்பு(1857-05-13)13 மே 1857
பிரித்தானியாவின் இந்தியா
இறப்பு16 செப்டம்பர் 1932(1932-09-16) (அகவை 75)
இலண்டன்
தேசியம்ஐக்கிய ராச்சியம்
துறைமருத்துவம்
கல்வி கற்ற இடங்கள்புனித ஃபிராட்போர் மருத்துவமனை
அறியப்படுவதுமலேரியா ஒட்டுண்ணி கண்டறிந்தமைக்காக
விருதுகள்உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு (1902)

சர் ரொனால்டு ராஸ் (Ronald Ross) மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்ற பிரித்தானிய மருத்துவர் ஆவார். மலேரியாவை உண்டாக்கும் பிளோஸ்மோடியத் தொற்றுயிரியை அனாஃபிலஸ் கொசுவில் கண்டறிந்தமைக்காக இப்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது[1].

ரொனால்டு இந்தியாவில் மே மாதம் 13 ஆம் நாள் 1857 ல் அல்மோராவில் பிறந்தார். இவரது தந்தை ஆங்கிலேய இராணுவ அதிகாரியாய் இருந்தார். எட்டு வயதில் கல்விகற்க இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட ரொனால்டு 1875 ஆம் ஆண்டு அங்கேயே மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். 1880 இல்படிப்பை முடித்து இந்திய மருத்துவ சேவையில் இணைந்தார். முதன்முதலில் மதராசப்பட்டினத்தில் அவருக்கு பணி நியமனம் ஆனது. 1892 ஆம் ஆண்டில் மலேரியா குறித்த தனது ஆய்வைத் தொடங்கினார்.

1897 ஆம் ஆண்டு ஊட்டியில் பணியமர்த்தப்பட்ட ராஸ் மலேரியாவால் தாக்கப்பட்டார். செக்கந்திராபாத்துக்கு மாற்றப்பட்ட பின் ஓஸ்மேனியா பல்கலைகழகத்தில் மலேரிய ஒட்டுண்ணி அனாஃபிலஸ் வகை கொசுவினுள் இருப்பதைக் கண்டறிந்தார். இந்த ஒட்டுண்ணிகள் கொசுக்களின் உமிழ்நீரில் உருப்பதைக் கண்டார்.இதிலிருந்து அவை எவ்வாறு மலேரியா நோயினைப் பரப்புகிறது எனத்தெளிந்து கூறினார்.

1902 ஆம் ஆண்டு மலேரியா குறித்த கண்டுபிடிப்புகளுக்காக இவர் நோபெல் பரிசு பெற்றார்.

1932 ,செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் இலண்டனில் இயற்கை எய்தினார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Ronald Ross - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Ronald Ross - Biographical"". Nobelprize.org. Nobel Media AB 2014. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொனால்டு_ராஸ்&oldid=3862392" இலிருந்து மீள்விக்கப்பட்டது