சூல்ஸ் ஹொஃப்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சூல்ஸ் ஹொஃப்மன்
Nobel Prize 2011-Press Conference KI-DSC 7581.jpg
பிறப்பு 2 ஆகத்து 1941 (1941-08-02) (அகவை 75)
எக்டர்நாக், லக்சம்பர்க்
தேசியம் பிரெஞ்சு
துறை உயிரியல்
பணியிடங்கள் தேசிய அறிவியல் ஆய்விற்கான மையம்
கல்வி கற்ற இடங்கள் இசுட்ராசுபோர்க் பல்கலைக்கழகம்
விருதுகள் 2011 மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு

சூல்ஸ் ஹொஃப்மன் (Jules A. Hoffmann, பிறப்பு: ஆகத்து 2, 1941) லக்சம்பர்கில் பிறந்த பிரெஞ்சு[1] உயிரியலாளர் ஆவார். பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்கில் உள்ள தேசிய அறிவியல் ஆய்விற்கான மையத்தின் (CNRS) ஆய்வு இயக்குனராகவும் நிர்வாகக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். 2007ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிவியல் அகாதெமியின் தலைவராக பொறுப்பேற்றார்.

இவரும், ரால்ஃப் ஸ்டைன்மனும், புரூஸ் பொய்ட்லரும் இணைந்து 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டனர்[2]. ஒரு நோய்க் கிருமி உடலுக்குள் நுழைந்த பின்னர் அதனை உணர்ந்து நோயெதிர்ப்பு ஆற்றல் எவ்வாறு செயல்பட ஆரம்பிக்கிறது, கிருமியை அழிக்க என்னென்ன முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பேராசிரியர்கள் பொய்ட்லரும், ஹொஃப்மனும் கண்டறிந்திருந்தனர். நோபல் பரிசின் மற்றைய பாதி கனடாவைச் சேர்ந்த ரால்ஃப் ஸ்டைன்மன் என்பவருக்கு "புதிய அச்சுறுத்தல்கள் வர வர அவற்றுக்கேற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது" என்பதைக் கண்டுபிடித்தமைக்காகக் கொடுக்கப்பட்டது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "CNRS senior researcher Jules Hoffmann awarded 2011 Nobel Prize in physiology or medicine". French National Centre for Scientific Research (3 October 2011). பார்த்த நாள் 4 October 2011.
  2. ""Jules A. Hoffmann - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  3. நோபல் நிறுவனம்(3 அக்டோபர் 2011). "Nobel Prize in Physiology or Medicine 2011". செய்திக் குறிப்பு.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்ஸ்_ஹொஃப்மன்&oldid=2006481" இருந்து மீள்விக்கப்பட்டது