உள்ளடக்கத்துக்குச் செல்

சான்டியாகோ ரமோன் கசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான்டியாகோ ரமோன் கஸல் Santiago Ramón y Cajal
பிறப்பு(1852-05-01)1 மே 1852
பெட்டில் டி அரகோன், நவார்ரெ,  எசுப்பானியா
இறப்பு18 அக்டோபர் 1934(1934-10-18) (அகவை 82)
மத்ரித், மத்ரித் கம்யூனிட்டி,  எசுப்பானியாwww.biography/>
தேசியம்எசுப்பானியா
துறைநரம்பணுவியல்
அறியப்படுவதுநவீன நரம்பியல் தந்தை
பின்பற்றுவோர்டி சான் ஜுவான்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1906)

சான்டியாகோ ரமோன் கசல் (Santiago Ramón y Cajal, எசுப்பானியம்: sanˈtjaɣo raˈmon i kaˈxal, 1852 மே 1 – 1934 அக்டோபர் 18)[1][2] எசுப்பானிய அறிவியலாளரும், நவீன நரம்பியல் துறையின் தந்தையும், நோயியல் மருத்துவரும் ஆவார். 1906-ல் உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.[3]

பிறப்பு[தொகு]

ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள எசுப்பானியாவின் பெட்டில் டி அரகோன் நகரில், நவார்ரெ என்ற பகுதியில் 1852-ம் ஆண்டு, மே மாதம் 1-ம் நாள், ரமோன் பிறந்தார்.[1] தாய் "அந்தோனியா கஸல்", தந்தை "ஜஸ்டோ ரமோன் கசசுஸ்" ஆவர்.[4]

குறும்பு சிறுவன்[தொகு]

இவரது தந்தை ஜஸ்டோ ரமோன் கசசுஸ் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராகவும், உடற்கூறியல் பேராசிரியராகவும் இருந்தவர். சிறுவன் ரமோனின் குறும்புகள் அதிகரித்ததால், பள்ளியில் இருந்து நிறுத்தினார் தந்தை. முடி திருத்துபவரிடமும், செருப்பு தைப்பவரிடமும் தன் மகனை உதவியாளராக சேர்த்துவிட்டார். அதன் பிறகும், பெரிதாக மாற்றம் இல்லாததால், மீண்டும் சிறுவனை பள்ளியில் சேர்த்தனர்.[5]

ஓவியன்[தொகு]

அற்புதமாக ஓவியம் வரையும் திறன்கொண்ட ரமோனுக்கு, ஓவியக் கலைஞராக வரவேண்டும் என்பதே ஆசை. 16 வயது இருந்தபோது, கல்லறைத் தோட்டங்களுக்கு அழைத்துச் சென்ற தந்தை, அங்கு கிடக்கும் எலும்புகளை ஓவியம் வரையுமாறு கூறினார். இதன்மூலம் மகனுக்கு உடற்கூறியலில் ஆர்வம் ஏற்படலாம் என்று அவர் நம்பினார்.[5]

படிப்பும் பணியும்[தொகு]

தனது தந்தை பணியாற்றும் ஸாரகோஸா பல்கலைக்கழகத்தில் (University of Zaragoza), 1869-ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ரமோன், தந்தையின் வழிகாட்டுதலில் சிறப்பாக பயின்றார். தலைசிறந்த மாணவருக்கான விருதையும் வென்ற அவர், 1873-ல் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.[6] பிற்காலத்தில், கட்டாய ராணுவ சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சான்டியாகோ ரமோன் கியூபா, எசுப்பானியா போன்ற ராணுவ மருத்துவ முகாம்களில் 1874-1875 காலகட்டத்தில் பணியாற்றினார்.[7] கடும் வயிற்று வலி, மலேரியாவால் பாதிக்கப்பட்டதால், ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்பு அம்மா, சகோதரிகளின் பராமரிப்பில் சிறிது காலம் இருந்து, உடல்நலம் தேறினார். ஸாரகோஸா பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியராகவும், உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றிய ரமோன், மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அங்குள்ள உடற்கூறியல் அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு சிறப்பு பணியாற்றினார்.[8]

ஆய்வும் கண்டுபிடிப்பும்[தொகு]

எசுப்பானியாவில் உள்ள மூன்றாவது பெரிய நகரமான வலென்சியாவில் உள்ள வலென்சியா பல்கலைக்கழகம்|வாலென்சியா பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராகப் பணிபுரிந்த ரமோன் கஸல், அங்கு உயிரியியல் சோதனைகளுக்கான ஆய்வுக்கூடத்தை நிறுவினார். அழற்சி நோய்கள் (Inflammatory Diseases), வாந்திபேதி (Cholera), நுண்ணுயிரியல் (Microbiology), புறவணியிழையம் (Epithelium), இழையம் (Tissue (biology) திசுக்களின் கூட்டமைப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்தார். 1887-ல் பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் (University of Barcelona) இணைந்த கஸல், நரம்பியல் திசுக்களை ஆராய்வதற்கான கோல்கீஸ் முறையைக் (Golgi's method) கற்று, அதை மேம்படுத்தினார். மத்திய நரம்பு மண்டலத்தின் நரம்பியல் கட்டமைப்புகள், செல் வகைகள் அவற்றின் கட்டமைப்பு கள், அவற்றின் இணைப்பு குறித்து விரிவான விளக்கங்களை வழங்கி, துல்லியமான படங்களையும் வரைந்தார்.[9]

படைப்பும் பரிசும்[தொகு]

ரமோன் கஸல் பல நூல்களையும், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் போன்ற மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.[10] 1905-ல் புனைப் பெயரில் "டாக்டர் பாக்டீரியா," (Dr. Bacteria) "விடுமுறை கதைகள்" (Vacation Stories) என்ற தலைப்பில் 5 அறிவியல் புனைகதைகளை எழுதி வெளியிட்ட கஸல், எசுப்பானியாவில் கல்வி, அறிவியல் ஆய்வுகள் மேம்பாட்டுக்காக ஏராளமான முனைப்புகளை மேற்கொண்டார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல விருதுகள், பட்டங்கள், கவுரவங்களைப் பெற்றவராக கருதப்படுகிறார். ‘நியூரான் டாக்ட்ரின்’ என்று பின்னாளில் அழைக்கப்பட்ட நரம்புத் தொகுதி கட்டமைப்பு குறித்த இவரது கண்டுபிடிப்புகளுக்காக 1906-ல் [11] இத்தாலிய விஞ்ஞானியான கேமிலோ கொல்கியுடன் இணைந்து இவருக்கு உடலியல் அல்லது மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[12]

இறப்பு[தொகு]

நோயியல் நிபுணர், தசைக்கூறு ஆராய்ச்சியாளர், சிறந்த நரம்பியல் விஞ்ஞானி என போற்றப்பட்ட சான்டியாகோ ரமோன் கஸல், இறக்கும் தருவாயிலும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். சான்டியாகோ ரமோன் கஸல், [[ஐரோப்பா|ஐரோப்பிய கண்டத்திலுள்ள எசுப்பானியாவின் மத்ரித் நகரில் 1934-ம் ஆண்டு, அக்டோபர் 18-ம் நாள் தனது 82-வது அகவையில் மறைந்தார்.[13]

சான்றாதாரங்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Santiago Ramón y Cajal: The Nobel Prize in Physiology or Medicine 1906". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
 2. A Mind for Numbers. Tarcher Penguin. 2014. p. 193. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-399-16524-5.
 3. "The Nobel Prize in Physiology or Medicine 1906". NobelPrize.org.
 4. "Santiago Ramón y Cajal - Biography, Facts and Pictures" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-30.
 5. 5.0 5.1 "Santiago Ramón y Cajal". www.scholarpedia.org (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
 6. Finger, Stanley (2000). "Chapter 13: Santiago Ramón y Cajal. From nerve nets to neuron doctrine". Minds behind the brain: A history of the pioneers and their discoveries. New York: Oxford University Press. pp. 197–216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-508571-X.
 7. "Santiago Ramón y Cajal". NNDB (ஆங்கிலம்) -2014. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
 8. "Cajal". www.psu.edu (ஆங்கிலம்). 1998. Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
 9. "the Contribution of Santiago Ramón y Cajal to Functional Neuroscience" (PDF). www.utdallas.edu (ஆங்கிலம்). 8. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016. {{cite web}}: Check date values in: |date= (help); Text "1/4" ignored (help); Text "2003" ignored (help); Text "January" ignored (help)
 10. www.casadellibro.com/busqueda-libros? RAMON Y CAJAL, SANTIAGO
 11. He won the Nobel Prize in 1906 for medicine along with Camillo Golgi.
 12. "Santiago Ramón y Cajal". www.biografiasyvidas.com (ஆங்கிலம்). 2004–2016. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2016.{{cite web}}: CS1 maint: date format (link)
 13. "Santiago Ramón y Cajal Biography". www.biography.com (ஆங்கிலம்). 14 June 2016. Archived from the original on 8 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்டியாகோ_ரமோன்_கசல்&oldid=3878861" இலிருந்து மீள்விக்கப்பட்டது