தசுக்கு ஓஞ்சோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசுக்கு ஓஞ்சோ
Tasuku Honjo
தசுக்கு ஓஞ்சோ
இயற்பெயர்本庶 佑
பிறப்புசனவரி 27, 1942 (1942-01-27) (அகவை 81)
கியோத்தோ, சப்பான்
தேசியம்சப்பானியர்
துறைமூலக்கூற்று நோய்த்தடுப்பியல்
பணியிடங்கள்கியோட்டோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கியோட்டோ பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்யசுத்தோமி நிசிசுக்கா
ஒசாமு அயாய்சி
விருதுகள்சப்பான் பேரரசப் பரிசு (1996)
கோகு பரிசு (2012)
கலாசார ஆணை (2013)
தாங்கு பரிசு(2014)
கியோட்டோ பரிசு (2016)
ஆலுப்பெர்ட்டு பரிசு (2017)
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2018)

தசுக்கு ஓஞ்சோ (Tasuku Honjo, பிறப்பு: சனவரி 27, 1942) உடலியங்கியலில் நோய்த்தடுப்பியல் துறையில் நன்கு அறியப்பட்ட சப்பானிய ஆய்வாளர். இவருக்கு 2018 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கும் உடலியங்கியலுக்குமான நோபல் பரிசை சேம்சு ஆலிசன் என்னும் அமெரிக்கருடன் இணைந்து வழங்கியுள்ளார்கள்.[1] இவருடைய முக்கியமான கண்டுபிடிப்பானது உயிரணுவின் இறப்பை திட்டப்படி இறக்கச்செய்யும் புரதப்பொருளைக் கண்டறிந்ததாகும். இப்புரதத்தை "பிடி-1" என்றழைக்கின்றார்கள்.[2] உயிரணுகளிடையே குறிப்புகள் செலுத்தும் சிறு மூலக்கூற்று புரதங்களாகிய இண்டர்லூக்கின்-4, இண்டர்லூக்கின்-5 ஆகியவற்றைக் கண்டறிந்ததற்காகவும் இவர் புகழ் பெற்றுள்ளார்.[3]

2014 ஆம் ஆண்டு, இவரும் சேம்சு ஆலிசனும் சேர்ந்து உயிரிய மருந்தியல் துறைக்கான தாங்கு பரிசை வென்றனர்.[4].

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

தசுக்கு ஓஞ்சோ கியோட்டோ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டத்தை 1966 இல் பெற்றார், பிறகு அங்கேயே மருத்துவ வேதியியலில் 1975 இல் யசுத்தோமி நிசிசுக்கா மற்றும் ஒசாமு அயாயிசி ஆகியோர்களின் நெறியாள்கையில் முனைவர் பட்டம் பெற்றார்.[5]

1971 முதல் 1974 வரை இவர் வாசிங்டன் காரினிகிக் கழகத்தின் உயிரிக்கருவியல் துறையிலும் அமெரிக்காவின் தேசிய குழந்தை நலமும் மாந்த வளர்ச்சிக்குமான கழகத்திலும் வருகைச் சிறப்பாளராகவும இருந்தார். இதன் பின்னர் இவர் 1974 முதல் 1979 வரை தோக்கியோ பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் துணைப்பேராசிரியராக இருந்தார். 1979 முதல் 1984 வரை ஒசாகா பல்கலைக்கழகத்தின் மருத்துவக் களத்தில், மரபணுவியல் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் இருந்தார்.[5].

1984 முதல் இவர் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியரணியில் இருக்கின்றார். 2017 இல் இவர் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் முன்னேகிய படிப்புக்கான கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகவும் துணை இயக்குநர்த் தலைவராகவும் இருந்து வருகின்றார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தசுக்கு_ஓஞ்சோ&oldid=3486504" இருந்து மீள்விக்கப்பட்டது