கியோட்டோ பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கியோட்டோ பரிசு
Kyoto Prize(U-S-A-) 2013-11-03 17-37.jpg
பரிசுப் பதக்க முகப்பு.
Locationகியோட்டோ
நாடு சப்பான்
வழங்கியவர்இனாமோரி நிறுவனம்
விருது(கள்)100 மில்லியன் yen ($900,000 உக்கும் கூடுதலானது), 20-காரட்டு தங்கப் பதக்கம்[1]
முதலில் வழங்கப்பட்டது1985
Number of laureates2017 ஆம் ஆண்டுவரை 106 பேருக்கு 100 பரிசுகள்
இணையதளம்www.kyotoprize.org/en/
TWN Order of Brilliant Star 6Class BAR.svg
பரிசு நாடா

கியோட்டோ பரிசு (京都賞) என்பது இனாமோரி அறக்கட்டளை 1984 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் ஒரு பெரும் பரிசு. அறிவியல், கலை, தொழில்நுட்பம், மெய்பொருளியல் ஆகிய துறைகளில் ஒப்பரிய ஆக்கங்கள் படைத்தவருக்கு அளிக்கப்படுகின்றது. இப் பரிசை சப்பான் பரிசு என்றும் சொல்வதுண்டு. நோபல் பரிசு போலவே பெரும் மதிப்பான பரிசு. நோபல் நிறுவனம் பரிசளிக்காத பல தொழில்நுட்பத் துறைகளில் ஒப்பரிய ஆக்கங்கள் படைத்தவர்களுக்கும் கியோட்டொ பரிசு அளிக்கப்படுகிறது. உலகளவில் இப் பரிசின் மதிப்பு மிக உயர்ந்து வருகிறது. இப் பரிசுத் தொகை கசுவொ இனாமோரி நிறுவிய அறக்கட்டளையில் இருந்து அளிக்கப்படுகிறது. கசுவொ இனாமோரி சுட்டாங்கல் (செராமிக்ஸ்) தொழில் நுட்பத்தால் ஈட்டிக் குவித்த பெரும் பணத்தால் 50 மில்லியன் சப்பானிய யென் மற்றும் கியொசெரா என்னும் கும்பினியின் பங்கு இவற்றைக் கொண்டு இந்த பரிசளிக்கும் அறக்கட்டளையை நிறுவினார்.


மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Joan Jonas Wins $900,000 Kyoto Prize". ARTnews. June 15, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியோட்டோ_பரிசு&oldid=3102371" இருந்து மீள்விக்கப்பட்டது