பேச்சு:கியோட்டோ பரிசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கும்பினி என்றால் companyயா? இது போன்ற சொற்களை தமிழ் விக்சனரியில் இணைத்து பொருள் விளக்கம், மூலம் அளித்தால் அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.--ரவி 13:17, 16 ஜூன் 2006 (UTC)

திரைப்படங்களில் இந்த சொல் பயன்படுத்தப்படுவதைக் கேட்டிருக்கிறேன். நாம் கலைக்களஞ்சிய நடைக்கேற்ப அதை மொழிபெயர்த்தும் குறிப்பிடலாம். -- Sundar \பேச்சு 13:45, 16 ஜூன் 2006 (UTC)
கும்பினி என்பது ஒரு அருமையான தமிழ்ச் சொல்!ஆனால் company என்பதற்கு ஒலியொற்றுமையோடும்

பொருள் இணைவோடும் பயன்படுத்தப்பட்ட சொல். கும்பு, குவி, குமி, குமுகு, குடும்பு குவலு எல்லாம் கூட்டத்தை, சேர்க்கையை குறிக்கும் சொல் அல்லது சொல் பகுதிகள். குவலையம் என்னும் பொழுது, நாம் எல்லோரும் சேர்ந்த உலகம், இது குவவு = கூடு, குவி என்னும் சொல்லில் இருந்து பிறப்பது. குப்பையை குமிச்சுக் கொட்டு என்பது பேச்சு வழக்கு, அதில் குமி, குமிச்சுக் கொட்டு என்பது கூட்டுவது, சேர்ப்பது என்பதே. துணி துவைக்கும் பொழுது அடித்துத் துவைத்தல், கும்மித் துவைத்தல் என்று இருவகை உண்டு. இதில் கும்மித் துவை என்று சொல்வது துணியை இரு கையால் குமித்து (ஒன்றுசேர குவித்துப்) பந்து போல வைத்து கல்லில் மோதி அமுக்கி அமுக்கித் துவைப்பது. இன்னும் விரியும் ஆகையால் விடுகிறேன். கும்பு என்பது சேர்வது, கும்பினி என்பது பலரும் சேர்ந்து உள்ள ஒரு அமைப்பு (இங்கே தொழில் நிறுவனம் என்னும் பொருளில் ஆளப்பட்ட 300-400 ஆண்டுகளுக்கு மேல் வழக்கில் இருந்த-இருக்கும் சொல்). வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற திரைப்படங்களிலே இச்சொல் ஆங்கிலேய கும்பினியாரைப் குறிக்க வரக் கண்டிருக்கலாம்.--C.R.Selvakumar 14:59, 16 ஜூன் 2006 (UTC)செல்வா

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கியோட்டோ_பரிசு&oldid=41927" இலிருந்து மீள்விக்கப்பட்டது