ரால்ஃப் ஸ்டைன்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரால்ஃப் எம்.ஸ்டைன்மன்
Ralph M. Steinman
ரால்ஃப் ஸ்டைன்மன்
பிறப்புசனவரி 14, 1943(1943-01-14)
மொண்ட்றியால், கியூபெக், கனடா
இறப்புசெப்டம்பர் 30, 2011(2011-09-30) (அகவை 68)[1]
மன்ஹாட்டன், நியூயோர்க், ஐ.அ
வாழிடம்நியூயோர்க் நகரம், நியூயோர்க், ஐ.அ
குடியுரிமைகனடியர்
தேசியம்கனடியர்
துறைநோய்த்தடுப்பாற்றல், உயிரணு உயிரியல்
பணியிடங்கள்ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம், நியூயார்க் நகரம்
கல்வி கற்ற இடங்கள்மெக்கில் பல்கலைக்கழகம்
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகிளைவடிவ உயிரணுக்கள் கண்டுபிடிப்பு
விருதுகள்2011 மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (மறைவிற்குப் பின்)

ரால்ஃப் ஸ்டைன்மன் (Ralph Marvin Steinman, சனவரி 14, 1943செப்டம்பர், 2011) என்பவர் கனடாவைச் சேர்ந்த நோய்த்தடுப்பாற்றல் மருத்துவரும் உயிரியலாளரும் ஆவார்[2]. இவர் 1973 ஆம் ஆண்டில் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுப் போது கிளைவடிவ உயிரணுக்களைக் (dendritic cells) கண்டுபிடித்தார்.[3]. இவருக்கும் அமெரிக்காவின் புரூஸ் பொய்ட்லர், சூல்ஸ் ஹொஃப்மன் ஆகியோருக்கும் 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[4]. "கிளைவடிவ உயிரணுக் கண்டுபிடிப்புக்காகவும், புதிய அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது" என்பதைக் கண்டுபிடித்தமைக்காகவும் ஸ்டைன்மனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது[5]. இவருக்கான நோபல் பரிசு 2011 அக்டோபர் 3 திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அவர் மூன்று நாட்களுக்கு முன்னர் செப்டம்பர் 30 இல் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார். ஆனாலும், "நல்லெண்ணத்தின் அடிப்படையில், அவர் உயிரோடு உள்ளார் என்ற நம்பிக்கையிலேயே பரிசு அறிவிக்கப்பட்டது," என பரிசுக் குழு தெரிவித்தது. இதனால், அறிவிக்கப்பட்ட பரிசை மீளப் பெறுவதில்லை என நோபல் பரிசுக் குழு தீர்மானித்தது[6]. மொத்த நோபல் பரிசுத் தொகையின் அரைவாசி இவருக்கும், மீதமான பகுதி மற்றைய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பபட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rockefeller University scientist Ralph Steinman, honored today with Nobel Prize for discovery of dendritic cells, dies at 68". ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம். 3 அக்டோபர் 2011. http://newswire.rockefeller.edu/?page=engine&id=1192. 
  2. ""Ralph M. Steinman - Biographical".". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2011/steinman-bio.html. பார்த்த நாள்: 19 சூலை 2015. 
  3. Steinman RM, Cohn ZA (1973). "Identification of a novel cell type in peripheral lymphoid organs of mice. I. Morphology, quantitation, tissue distribution". J. Exp. Med. 137 (5): 1142–62. doi:10.1084/jem.137.5.1142. பப்மெட்:4573839. 
  4. ""Ralph M. Steinman - Facts".". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2011/steinman-facts.html. பார்த்த நாள்: 19 சூலை 2015. 
  5. "Nobel Prize in Physiology or Medicine 2011". நோபல் நிறுவனம். 3 அக்டோபர் 2011. http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2011/press.html. 
  6. Late Nobel medicine laureate Ralph Steinman keeps award, பிபிசி, அக்டோபர் 3, 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரால்ஃப்_ஸ்டைன்மன்&oldid=3578154" இருந்து மீள்விக்கப்பட்டது