சோல் பெர்ல்மட்டர்
தோற்றம்
| சோல் பெர்ல்மட்டர் Saul Perlmutter | |
|---|---|
வானியலுக்கான ஷா பரிசுடன் சால் பெர்ல்முட்டர் (2006) | |
| பிறப்பு | 1959 இலினொய், ஐக்கிய அமெரிக்கா |
| வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
| தேசியம் | அமெரிக்கர் |
| துறை | இயற்பியல் |
| பணியிடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் (முனைவர்) |
| ஆய்வு நெறியாளர் | ரிச்சார்ட் ஏ. முல்லர்[1] |
| அறியப்படுவது | விரிவடையும் பேரண்டம் / கரிய ஆற்றல் |
| விருதுகள் | ஏர்னெஸ்ட் ஒர்லாண்டோ லாரன்ஸ் விருது (2002) ஷா பசிசு (2006) குரூபர் பரிசு (2007) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2011) |
சோல் பெர்ல்மட்டர் (Saul Perlmutter, பிறப்பு: 1959) என்பவர் அமெரிக்க வானியற்பியலாளரும், பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரும் ஆவார். இவர் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்கக் கழகத்தின் உறுப்பினராகவும் உள்ளார். பேரண்டம் விரைவாக விரிவடைவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தமைக்காக இவருக்கும் அடம் ரீஸ், மற்றும் பிறையன் சிமித் ஆகியோருக்கும் 2006 ஆம் ஆண்டிற்கான வானியலுக்கான ஷா பரிசும், 2011 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gerson Goldhaber. "The Acceleration of the Expansion of the Universe: A Brief Early History of the Supernova Cosmology Project (SCP)". Proceedings of the 8th UCLA Dark Matter Symposium (Marina del Rey). doi:10.1063/1.3232196. Bibcode: 2009AIPC.1166...53G.
வெளி இணைப்புகள்
[தொகு]- Supernova Cosmology Project Website
- Supernova Cosmology Project
- Shaw Prize Press Release பரணிடப்பட்டது 2011-10-07 at the வந்தவழி இயந்திரம்
- Nobel Prize in Physics Press Release
பகுப்புகள்:
- வானியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்
- 1959 பிறப்புகள்
- அமெரிக்க வானியலாளர்கள்
- நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள்
- நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்
- வாழும் மக்கள்
- அமெரிக்க இயற்பியலாளர்கள்
- அண்டவியலாளர்கள்
- அமெரிக்க வானியற்பியலாளர்கள்
- ஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்
- கலிபோர்னியா பல்கலைக்கழக (பெர்க்லி) முன்னாள் மாணவர்கள்
