கரோல் கிரெய்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கரோல் கிரெய்டர்
Carol Greider
Carol Greider 2009-01.JPG
பிறப்புஏப்ரல் 15, 1961 (1961-04-15) (அகவை 60)
சான் டியேகோ, கலிபோர்னியா
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைமூலக்கூற்று உயிரியல்
பணியிடங்கள்ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாண்டா பார்பரா(1983)
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)(1987)
ஆய்வு நெறியாளர்எலிசபெத் பிளாக்பர்ன்
அறியப்படுவதுமுனைக்கூறுகளின் ஆய்வு
விருதுகள்லாஸ்க்கர் விருது, மருத்துவத்துக்கான நோபல் பரிசு (2009)

கரோல் கிரெய்டர் (Carol Greider, பிறப்பு: ஏப்ரல் 15, 1961) என்பவர் ஒரு மூலக்கூற்று உயிரியலாளர்[1]. இவர் 1984 ஆம் ஆண்டில் எலிசபெத் பிளாக்பர்ன் என்பவருடன் இணைந்து நடத்திய டெலொமெரேஸ் என்ற நொதியத்தைக் கண்டுபிடித்தார். இவரே நிறப்புரிகளின் முனைகளில் இருக்கும் முனைக்கூறுகளின் அமைப்புக் குறித்து முதன் முதலாக ஆராய்ந்தவர். நிறப்புரிகள் எவ்வாறு காக்கப்படுகின்றன குறித்த ஆய்வுக்காக பிளாக்பர்ன், மற்றும் ஜாக் சோஸ்டாக் ஆகியோருடன் இவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கலிபோர்னியாவின் சான் டியேகோவில் பிறந்தவர் கிரெய்டர்[3]. அவரது குடும்பம் சான் டியேகோவில் இருந்து டேவிஸ் என்ற இடத்துக்கு இடம்பெயர்ந்தது. சாண்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1983 இல் உயிரியலில் பட்டப் படிப்பை முடித்தார். 1987 இல் மூலக்கூற்று உயிரியலில் பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிளாக்பேர்னின் கீழ் முனைவர் பட்டத்தையும் முடித்தார். பெர்க்லியில் பணியாற்றும் போது டெலொமெரேசு என்ற நொதியத்தை பிளாக்பெர்ன் உடன் இணைந்து கண்டுபிடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Carol W. Greider - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. ""Carol W. Greider - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  3. Hopkins “Telomere” expert Carol Greider shares Germany's largest science prize

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோல்_கிரெய்டர்&oldid=3238637" இருந்து மீள்விக்கப்பட்டது