உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோர்ஜ் ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித்
பிறப்புமே 10, 1930 (1930-05-10) (அகவை 94)
வைட் பிளைன்ஸ், நியூ யோர்க்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைபிரயோக பௌதிகவியல்
பணியிடங்கள்பெல் ஆய்வுகூடம்
கல்வி கற்ற இடங்கள்சிகாகோ பல்கலைக்கழகம் (PhD 1959)
பென்சில்வேனியா பல்கலைக்கழகம் (BSc 1955)
அறியப்படுவதுமின்மம் வழிந்துநகர் கருவி
விருதுகள்IEEE மொரிஸ் N. லெய்மன் நினைவு விருது (1974)
டிராபர் பரிசு (2006)
பௌதிகவியலுக்கான நோபல் பரிசு (2009)

ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் (பிறப்பு மே 10,1930) என்பவர் ஒரு அமெரிக்க விஞ்ஞானியும் பிரயோக பௌதிகவியலாளருமாவார். இவர் மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) என்னும் நுண்மிண்மக் கருவியைக் கண்டுபிடித்தவர்களின் ஒருவர். இவர் "படிம குறைகடத்திச் சுற்று-CCD உணரி"யைக் (imaging semiconductor circuit—the CCD sensor) கண்டுபிடித்தமைக்காக 2009ம் ஆண்டின் பௌதிகவியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார். இப்பரிசின் கால் பங்கு அவருக்கு வழங்கப்பட்டது.[1]

ஸ்மித் வைட் பிளைன்ஸ், நியூயோர்க்கில் பிறந்தார். ஸ்மித் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றினார். இவர் தனது BSc பட்டத்தை 1955ம் ஆண்டு பென்சில்வேனியப் பல்கலைக்கழகத்திலும், PhDயை 1959ல் சிகாகோ பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். இவரது ஆய்வேடு வெறும் மூன்று பக்கங்களை மாத்திரம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.[2] ஸ்மித் முர்ரே ஹில், நியூ ஜேர்சியிலுள்ள பெல் ஆய்வுகூடத்தில் 1959ம் ஆண்டிலிருந்து 1986ல் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். இங்கு அவர் புதிய லேசர் கதிர்கள் மற்றும் குறைகடத்திச் சாதனங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். தமது பதவிக்காலத்தில், பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றார். மேலும் அவர், பேரளவு ஒருங்கிணைச் சுற்று (VLSI) சாதனப் பணியகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.[3]

1969ல், ஸ்மித்தும் வில்லார்ட் பொயிலும் மின்மம் வழிந்துநகர் கருவி(CCD)யைக் கண்டுபிடித்தனர்.[4] இதற்காக, 1973ல் ஃபிராங்கிளின் நிறுவனத்தின் ஸ்டுவர்ட் பலன்டைன் பதக்கம், 1974 IEEE மொரிஸ் N. லெய்மன் நினைவு விருது, 2006 சார்ள்ஸ் ஸ்டார்க் டிராபர் பரிசு மற்றும் 2009 பௌதிகவியலுக்கான நோபல் பரிசு ஆகிய விருதுகளை இருவரும் இணைந்து பெற்றனர்.

பொயிலும் ஸ்மித்தும் கடற் பயணத்தில் ஆர்வமுடையோராவர். இவர்களிருவரும் இணைந்து பல பயணங்களை மேற்கொண்டுள்ளனர். ஓய்வுபெற்ற பின்னர் தனது வாழ்க்கைத்துணையான ஜெனட்டுடன் பதினேழு வருடங்கள் உலகம் முழுவதும் பயணித்தார். எனினும் 2003ம் ஆண்டின் பின்னர் எலும்புச் சிதைவினால் தனது பொழுதுபோக்கான பயணம் மேற்கொள்ளலை நிறுத்திக் கொண்டார்.[3] இவர் தற்போது வார்டவுன், நியூ ஜேர்சியில் வசிக்கிறார்.

References[தொகு]

  1. The Nobel Prize in Physics 2009, Nobel Foundation, 2009-10-06, பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
  2. George Smith telephone interview, Nobel Foundation, 2009-10-06, பார்க்கப்பட்ட நாள் 2009-10-11
  3. 3.0 3.1 PROFILE: George Smith - Nobel winner and world sailor, EarthTimes, 2009-10-06, archived from the original on 2012-09-05, பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
  4. Smith, George E. (2009). Karl Grandin (ed.). Les Prix Nobel. The Nobel Prizes 2009. Stockholm: The Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 22 May 2012.

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_ஸ்மித்&oldid=3729221" இலிருந்து மீள்விக்கப்பட்டது