உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் கொக்ரொஃப்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் ஜோன் கொக்ரொஃப்ட்
Sir John Cockcroft
பிறப்பு(1897-05-27)27 மே 1897
யோர்க்சயர், இங்கிலாந்து
இறப்பு18 செப்டம்பர் 1967(1967-09-18) (அகவை 70)
கேம்பிரிட்ச், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்அணுவாற்றல் ஆய்வு நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்விக்டோரியா பல்கலைக்க்ழகம், மான்செஸ்டர்,
மான்செஸ்டர் மாநகர தொழிநுட்பக் கல்லூரி
சென் ஜோன்ஸ் கல்ல்ய்லூரி, கேம்பிரிட்ச்
ஆய்வேடுமேற்பரப்புகளில் மூலக்கூறு ஓடைகளின் ஒடுக்க நிகழ்வுகள் (1928)
Academic advisorsஎர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு
அறியப்படுவதுஅணுக்கரு பிளவு
விருதுகள்

சர் ஜோன் டக்லசு கொக்ரொஃப்ட் (Sir John Douglas Cockcroft, 27 மே 1897 – 18 செப்டம்பர் 1967) என்பவர் பிரித்தானிய இயற்பியலாளர் ஆவார். இவர் 1951 ஆம் ஆண்டில் அணுக்கருப் பிளவில் நடத்திய ஆய்வுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை எர்னஸ்டு வால்ட்டனுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். இவர் அணுக்கரு ஆற்றலை உருவாக்குயதில் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.

முதலாம் உலகப் போரில் பிரித்தானிய இராணுவத்தில் மேற்கு முனையில் பங்குபற்றினார். கொக்ரொஃப்ட் மான்செஸ்டர் நொழிநுட்பக் கல்லூரியில் மின்பொறியியல் படித்தார். பின்னர் புலமைப் பரிசில் பெற்று கேம்பிரிட்ச் சென் ஜோன்சு கல்லூரியில் படித்தார். எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு இவரை கவென்டிசு ஆய்வுகூடத்தில் ஆய்வு மாணவராக இணைத்துக் கொண்டார். 1928 இல் ரதர்போர்டின் மேற்பார்வையில் கொக்ரொஃப்ட் தனது முனைவர் ஆய்வை முடித்தார். எர்னெஸ்ட் வால்ட்டன், ப்மார்க் ஒலிபாண்ட் ஆகியோருடன் இணைந்து கொக்ரொஃப்ட்–வால்ட்டன் முடுக்கியை உருவாக்கினார். கொக்ரொஃப்ட்டும் வால்ட்டனும் இணைந்து இக்கருவி மூலம் அணுக்கருவை செயற்கையாகப் பிளக்கும் முறையைக் கண்டுபிடித்தனர். இது அணுக்கருப் பிளவு என அழைக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கொக்ரொஃப்ட் அறிவியல் ஆய்வு மையத்தின் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு ரேடார் பற்றி ஆய்வு நடத்தினார். அணுக்கரு ஆயுதங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியங்களை ஆராய்ந்தார். 1940 இல், டிசார்ட் திட்டத்தின் கீழ் பிரித்தானியத் தொழில்நுட்பங்களை அமெரிக்க சகாக்களுடன் பகிர்ந்து கொண்டார். இத்திட்டத்தின் விளைவாக போரின் பிற்பகுதியில், வி-1 பறக்கும் வெடிகுண்டுகளைத் தாக்குவதற்குத் தேவையான உபகரணங்கள் அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவுக்குத் தரப்பட்டன. 1944 மே மாதத்தில் மொண்ட்ரியால் ஆய்வுகூடத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

போரின் பின், கொக்ரொஃப்ட் அணுவாற்றல் ஆய்வு நிறுவனத்தின் (AERE) இயக்குநராக நியமிக்கப்பட்டார். இங்கு கிளீப் (GLEEP) என்ற மேற்கு ஐரோப்பாவின் முதலாவது அணுக்கரு உலை 1947 ஆகத்து 15 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1959 முதல் 1967 வரை கேம்பிரிட்ச் சர்ச்சில் கல்லூரியின் முதல் ஆசிரியராகவும், 1961 முதல் 1965 வரை கான்பரா ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றினார்.

அணுக்கரு ஆய்வு

[தொகு]

1924 இல் எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு தனது கவென்டிசு ஆய்வுகூடத்தில் கொக்ரொஃப்டை ஆய்வு மாணவராகச் சேர்த்துக் கொண்டார்.[1] 1924 செப்டம்பர் 6 இல் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இக்காலகட்டத்தில் இவர் உருசிய இயற்பியலாளர் பீட்டர் காப்பித்சாவின் உதவியாளராகப் பணியாற்றினார். காப்பித்சா மிகக் குறைந்த வெப்பநிலைகளில் காந்தப் புலங்களின் இயற்பியல் குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தார். கொக்க்ரொஃப்ட் இவருக்கு ஈலியம் திரவமாக்கிகளை உருவாக்க உதவி புரிந்தார்.[2]

கொக்ரொஃப்ட் புரோத்தன்கள் 300,000 இலத்திரன்வோல்ட் ஆற்றலுடன் போரான் அணுக்கருவை ஊடுருவ வல்லது எனக் கண்டுபிடித்தார். கொக்ரொஃப்டும் வால்ட்டனும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தமது வேகமுடுக்கியை உருவாக்குவதற்கு உழைத்தனர். இதற்கென ஒரு மின்மாற்றி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.[2][3][4][5] 1932 இல் இருவரும் தமது முடுக்கியைப் பயன்படுத்தி இலித்தியம், பெரிலியம் ஆகியவற்றை அதிக-ஆற்றல் கொண்ட புரோத்தன்களால் மோதச் செய்தனர். இதன் விளைவாக காம்மா கதிர்களை அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் அவதானித்தது நொதுமிகள் என ஜேம்ஸ் சாட்விக் காட்சிப்படுத்தினார். கொக்குரொஃப்டும் வால்ட்டனும் பின்னர் ஆல்ஃபா துகள்களைப் பெற எத்தனித்தார்கள். 1932 ஏப்ரல் 14 இல், ஆல்ஃபா துகள்களை அவர்கள் கண்டுபிடித்தனர். நேச்சர் இதழில் அவர்கள் முதன் முறையாக செயற்கை முறை அணுக்கரு சிதைவை அறிவித்தார்கள்:[6]

7
3
Li
+ p → 24
2
He
+ 17.2 MeV

அணுவைப் பிளத்தல் என அழைக்கப்பட்ட இக்கண்டுபிடிப்புக்காக 1938 இல் இயூசு விருதும்,[7] 1951 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.[8]

குறிப்புகள்

[தொகு]
  1. Cockcroft, John Douglas. "On phenomena occurring in the condensation of molecular streams on surfaces". கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம். Archived from the original on 25 February 2021. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
  2. 2.0 2.1 Allibone, T. E. "Cockcroft, Sir John Douglas (1897–1967), physicist and engineer". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/2473.  (Subscription or UK public library membership required.)
  3. Oliphant, M. L. E.; Penney, L. (1968). "John Douglas Cockcroft. 1897–1967". Biographical Memoirs of Fellows of the Royal Society 14: 139. doi:10.1098/rsbm.1968.0007. 
  4. Hartcup & Allibone 1984, ப. 37–42.
  5. ஜார்ஜ் காமாவ் (March 1928). "Zur Quantentheorie des Atomkernes". Zeitschrift für Physik 51 (3). doi:10.1007/BF01343196. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-3328. Bibcode: 1928ZPhy...51..204G. 
  6. Hartcup & Allibone 1984, ப. 50–53.
  7. "Award winners : Hughes Medal". அரச கழகம். பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.
  8. "The Nobel Prize in Physics 1951". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 4 September 2016.

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கொக்ரொஃப்ட்&oldid=3849381" இலிருந்து மீள்விக்கப்பட்டது