மின்பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மின் கம்பம் - அன்றாடம் மாந்தர் எதிர்கொள்ளும் மின்பொறியியல் தொடர்புடைய விசயம்

மின்பொறியியல் பொதுவாக மின்சாரம், மின்னணு மற்றும் மின்காந்தவியல் ஆய்வு மற்றும் பயன்பாடு கையாளும் ஒரு துறை. இப்புலத்தில் மின் தந்தி மற்றும் மின்னாற்றல் விநியோக வணிகமயமாக்கல் முதலான செயல்பாடுகளைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தனி அடையாளம் காட்டும் தொழிலாக அமைந்தது. அது இப்போது சக்தி, மின்னணுவியல், கட்டுப்பாட்டு அமைப்புகள், சமிக்ஞை செயலாக்கம் மற்றும் தொலைத்தொடர்பு உட்பட்ட பிற துறைகளுக்கு வழி வகுத்துள்ளது.

மின் பொறியியலில் மின்னணு பொறியியலும் அடங்கும்.இது கணிப்பொறி , தொலைதொடர்பு போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. மின் பொறியியல் என்பது மின்சார உற்பத்தி , அதைத் தேவையான இடத்திற்குக் கடத்துதல் , அதன் வினியோகம் மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

அறிவியல் ஆர்வத்தில் 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் மின் பொறியாளர் என வில்லியம் கில்பர்ட் அவர்களைச் சொல்லலாம்.இவர்தான் முதலில் மின்காந்தப் புலத்திற்கும் , நிலையான மின்சாரத்திற்குமான வரையறையை அளித்தவர். ஆனால் 19 ஆம் நூற்றாண்டுவரை பெரிய அளவில் எந்த விஞ்ஞான முன்னேற்றமும் இத்துறையில் காணப்படவில்லை. 1827 -ல் ஓம் என்பவர் மின்சாரத்திற்கும் மின் அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தினார் . மேலும் 1873-ல் மேக்ஸ்வெல் என்பவர் மின்சாரத்திற்கும் காந்தசக்திக்குமான தொடர்பை தெளிவுபடுத்தினார்.

1830 -ன் தொடக்கத்தில் மின்சாரம் நடைமுறை பயன்பாட்டிற்கு வந்தது. டெலிகிராமில் பயன்படுத்தப்பட்டது. 1893 -ல் சிகாகோவில் நடைபெற்ற சர்வதேச மின்னியல் மாநாட்டின் அமர்வில் , வோல்ட் , ஆம்பியர் , கூலும்ப் , ஓம் , ஃபாரட் மற்றும் ஹென்றி ஆகிய அலகுகளை வரையறை செய்து அதை வெளியிட்டனர்.

அதன் பின்னான வருடங்களில் இயற்பியலின் கீழான ஒரு பிரிவாக மின்னியல் கருதப்பட்டது.1883 -ல் 'டிராம்ஸ்டெட் பல்கலைக்கழகம் மின்னியலுக்கென தனிப் பாடப்பிரிவைத் தொடங்கியது. அதன் பின்னர் பல்வேறு பல்கலைக் கழகங்களும் மின்னியலுக்கென தனிப்பாடப் பிரிவை ஆரம்பித்தன.அதன் பின்னர் மின்சாரத்தின் பயன்பாடுகள் பரவலாகத் தொடங்கின.1882 -ல் தாமஸ் ஆல்வா எடிசன் 110 வோல்ட் நேர்மின்சாரத்தை நியூயார்க்கிலுள்ள மான்ஹெட்டன் தீவில் 59 வாடிக்கையாளருக்கு வழங்கினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்பொறியியல்&oldid=1931227" இருந்து மீள்விக்கப்பட்டது