ஆம்பியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆம்பியர்
Galvanometer 1890 drawing.png
மின்னோட்டத்தை கல்வனோமானி மூலமாக அளக்க முடியும், காந்த ஊசி மின்னோட்டத்துக்கு துலங்கல் காட்டும்.
அலகுத் தகவல்
அலகு முறைமை: SI அலகு
அலகு பயன்படும் இடம் மின்னோட்டம்
குறியீடு: A

ஆம்பியர் (குறியீடு: A) [1]என்பது மின்னோட்டத்தின் பன்னாட்டு முறைமை (SI) அடிப்படை அலகு ஆகும். ஒரு அம்பியர் என்பது, வெற்றிடமொன்றில் 1m தொலைவில் உள்ள இரண்டு முடிவிலி நீளக் கம்பிகளுக்கு இடையில் 2 x 10-7N எனும் விசையைத் தோற்றுவிக்கும் மாறாத மின்னோட்டத்தின் அளவு என வரையறுக்கப்படுகிறது. ஒரு செக்கனில் பாயும் ஒரு கூலோம் (6.241 × 1018 எதிர்மின்னிகள்) மின்மமே ஒரு அம்பியர் என வரைவிலக்கணப்படுத்தப்படும்.

அளவில் மாறுபடாத மின்னோட்டம் சில்வர் நைட்ரேட் கரைசலில் பாய்ந்து 0.0011180 கிராம் வெள்ளியை ஒரு நொடியில் படியச் செய்யுமானால் அது உலகப் பொது ஆம்பியர் (International ampere) எனப்படும். இதுவும் ஆர்பியருக்கான ஒரு விளக்கமாகும்.

ஓம் விதியின்படி , ஒரு மின்சுற்றில் மின்தடையானது, மின் இயக்க விசைக்கு நேர்விகித்திலும் அதில் பாயும் மின்னோட்டத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கிறது.அதாவது R = V/I க்குச் சமம்.அல்லது

I=V/R ஆகும்.

இதிலிருந்து, ஒரு ஓம் மின் தடையினை ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டில் வைத்திருக்கும் போது அதில் பாயும் மன்னோட்டம் ஒரு ஆம்பியருக்குச் சமம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. இலங்கை அரசின் தரம் 11 அறிவியல் பாடத்திட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பியர்&oldid=1980700" இருந்து மீள்விக்கப்பட்டது