உள்ளடக்கத்துக்குச் செல்

நியூட்டன் (அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியலில், நியூட்டன் (newton, குறியீடு: N) என்பது விசையின் SI அலகாகும். சர் ஐசக் நியூட்டன் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. நியூட்டன் அலகு முதன்முதலில் 1904 வாக்கில் பயன்படுத்தப்பட்டது. 1948-இல் நடந்த நிறைகள் மற்றும் அளவைகள் மீதான பொது மகாநாடு (General Conference on Weights and Measures - CGPM)-க்குப் பிறகு, விசையின் அலகாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒரு கிலோகிராம் திணிவுள்ள பொருளொன்றில் ஒரு மீட்டர்/செக்கன்2 வேகவளர்ச்சியை (acceleration) உருவாக்கத் தேவையான விசையே ஒரு நியூட்டன் என வரைவிலக்கணம் கூறுகின்றது..[1][2][3]

நியூட்டன், SI அடிப்படை அலகுகளில், கிகி x மீ x செக்−2 என்பவற்றை உள்ளடக்கிய ஒரு SI அலகு ஆகும்.

எடுத்துக்காட்டுகள்

[தொகு]

நிறை என்பதன் ஒரு வரைவிலக்கணம், புவியீர்ப்பு காரணமாக இரு பொருட்களிடையே உள்ள விசை என்பதனால், நியூட்டன் நிறையின் ஒரு அலகுமாகும். புவி மேற்பரப்பின் வெவ்வேறு இடங்களில் சில பத்திலொரு பங்கு வீதம் அளவுக்கு வேறுபட்டாலும், ஒரு கிலோகிராம் திணிவுள்ள ஒரு பொருள் புவியின் மேற்பரப்புக்கு அண்மையில் அண்ணளவாக 9.81 நியூட்டன்களாக இருக்கும். வேறுவகையில், 9.81−1 கிகி திணிவுள்ள ஒரு பொருள் (≈101.94 கிராம்கள்) அண்ணளவாக ஒரு நியூட்டன் நிறையுடையதாக இருக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bureau International des Poids et Mesures (2019). The International System of Units (SI) (PDF) (9 ed.). Bureau International des Poids et Mesures (BIPM). p. 137. Archived from the original on 30 September 2021. பார்க்கப்பட்ட நாள் 22 September 2021.
  2. "Newton | unit of measurement". Encyclopædia Britannica. 17 December 2020. Archived from the original on 27 September 2019. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
  3. The International System of Units (SI) (1977 ed.). U.S. Department of Commerce, National Bureau of Standards. 1977. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9282220451. Archived from the original on 11 May 2016. பார்க்கப்பட்ட நாள் 15 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூட்டன்_(அலகு)&oldid=4100089" இலிருந்து மீள்விக்கப்பட்டது