இசிதர் ஐசக் ரபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசிதர் ஐசக் ரபி
Isidor Isaac Rabi
1944 இல் ரபி
பிறப்புஇசுரேல் ஐசாக் ரபி
(1898-07-29)சூலை 29, 1898
ரிமனோவ், கலீசியா, ஆத்திரியா-அங்கேரி (இன்றைய போலந்து)
இறப்புசனவரி 11, 1988(1988-01-11) (அகவை 89)
நியூயார்க்கு நகரம், நியூயார்க், அமெரிக்கா
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம்
MIT
கல்வி கற்ற இடங்கள்கோர்னெல் பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
ஆய்வேடுபடிகங்களின் முதன்மை காந்த பாதிப்புகள் (1927)
ஆய்வு நெறியாளர்ஆல்பர்ட் பொட்டர் வில்சு
முனைவர் பட்ட 
மாணவர்கள்
  • யூலியான் சுவிங்கர்
  • நார்மன் ராம்சி
  • மார்ட்டின் பெர்ல்
  • அரோல்ட் பிரவுன்
அறியப்படுவதுஅணுக்கருக் காந்த ஒத்ததிர்வு
ரபி வட்டம்
ரபி பிரச்சனை
ரபி அதிர்வு முறை
விருதுகள்
கையொப்பம்

இசிதர் ஐசக் ரபி (Isidor Isaac Rabi, இயற்பெயர்: இசுரேல் ஐசக் ரபி; சூலை 29, 1898   - சனவரி 11, 1988) ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் 1944ஆம் ஆண்டில் அணு காந்த அதிர்வினை கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இது காந்த அதிர்வு அலைவு வரைவில் பயன்படுத்தப்படுகிறது . கதிரலைக் கும்பா மற்றும் நுண்ணலை அடுப்புகளில் பயன்படுத்தப்படும் குழிம காந்தலைப்பில் பணிபுரிந்த விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர் ஆவார்.

இவர் கலீசியாவின் ரைமானோவில் ஒரு பாரம்பரிய போலந்து-யூத குடும்பத்தில் பிறந்தார். இவர் குழந்தையாக இருந்தபோது இவர் குடும்பத்தினர் அமெரிக்காவிற்கு வந்து நியூயார்க்கின் லோயர் ஈஸ்ட் பக்கத்தில் குடியேறினர். இவர் 1916இல் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பிரிவில் பயின்றார். ஆனால் சில காலத்திலேயே இவர் வேதியியலுக்கு மாறினார். பின்னர் இவர் இயற்பியலில் ஆர்வம் காட்டினார். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். அங்கு சில படிகங்களின் காந்த பாதிப்பு குறித்த ஆய்வறிக்கையில் இவர் முனைவர் பட்டம் பெற்றார். 1927ஆம் ஆண்டில் இவர் ஐரோப்பாவுக்குச் சென்றார். அங்கு தன் காலத்தின் மிகச் சிறந்த இயற்பியலாளர்களைச் சந்தித்து அவர்களுடன் பணியாற்றினார்.

1929ஆம் ஆண்டில் ரபி அமெரிக்காவுக்குத் திரும்பினார். அங்கு கொலம்பியாவில் ஆசிரியராகப் பணி புரிந்தார். கிரிகோரி பிரீட் உடன் இணைந்து இவர் சீமன் விளைவை உருவாக்கி, அணுக்கருவின் பண்புகளை உறுதிப்படுத்த ஸ்டெர்ன்-ஜெர்லாக் பரிசோதனையை மாற்றியமைக்க முடியும் என்று கணித்தார். 1944ஆம் ஆண்டில் அணு காந்த அதிர்வினைக் கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இது காந்த அதிர்வு அலைவு வரைவில் பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது கதிரலைக் கும்பா, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (எம்ஐடி) கதிரியக்க ஆய்வகம் (RadLab) மற்றும் மன்ஹாட்டன் திட்டம் ஆகியவற்றில் இவர் பணியாற்றினார். போருக்குப் பிறகு, அணுசக்தி ஆணையத்தின் பொது ஆலோசனைக் குழுவில் (ஜிஏசி) பணியாற்றினார். மேலும் 1952 முதல் 1956 வரை அதன் தலைவராக இருந்தார். பாதுகாப்பு அணிதிரட்டல் அலுவலகம் மற்றும் படையணியின் எறியியலுக்குரிய ஆராய்ச்சி ஆய்வகத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுக்களிலும் (எஸ்ஏசி) பணியாற்றினார். மேலும் அதிபர் டுவைட் டி. ஐசனோவரின் அறிவியல் ஆலோசகராகவும் இருந்தார். இவர் 1946இல் புரூக்ஹவன் தேசிய ஆய்வகத்தை நிறுவும் பணிகளில் ஈடுபட்டார். பின்னர் யுனெஸ்கோவிற்கு அமெரிக்காவின் பிரதிநிதியாக, 1952இல் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தினை உருவாக்கினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவி உருவாக்கப்பட்டபொழுது அந்தப் பதவியை முதலில் பெற்றவர் ரபி ஆவார்.

ஆரம்ப ஆண்டுகளில்[தொகு]

இஸ்ரேல் ஐசக் ரபி ஜூலை 29, 1898 அன்று கலீசியாவின் ரைமானோவில் ஒரு போலந்து-யூத மரபு வழி யூத குடும்பத்தில் பிறந்தார். அப்போது அது ஆஸ்திரியா-அங்கேரியின் ஒரு பகுதியாக இருந்தது. இவர் பிறந்த பின்னர், இவர் தந்தை டேவிட் ரபி அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். இவரும் இவர் தாயார் ஷீண்டலும் சில மாதங்களுக்குப் பின் அமெரிக்கா சென்றனர். மேலும் குடும்பம் மன்ஹாட்டனின் லோயர் ஈஸ்ட்டில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு குடியிருப்பில் குடியேறியது. வீட்டில் குடும்பத்தினர் இத்திய மொழி பேசினர். 1907ஆம் ஆண்டில் இவர்கள் குடும்பம் பிரவுண்ஸ்வில், புரூக்ளினுக்குக் குடிபெயர்ந்தது. அங்கு இவர்கள் காய்கறிக் கடை வைத்திருந்தனர்.[1]

சான்றுகள்[தொகு]

  1. Rigden 1987, ப. 17–21.

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Interview with Isidor Isaac Rabi". War and Peace in the Nuclear Age. 1986. பார்க்கப்பட்ட நாள் March 22, 2016.
  • கணித மரபியல் திட்டத்தில் இசிதர் ஐசக் ரபி
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசிதர்_ஐசக்_ரபி&oldid=3800736" இலிருந்து மீள்விக்கப்பட்டது