இரோசி அமானோ

இரோசி அமானோ (Hiroshi Amano, பிறப்பு: செப்டம்பர் 11, 1960, ஃகமாமாட்சு நகரம்[1]) சப்பான் நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். இவர் 2014 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை இசாமு அக்காசாக்கி, சுச்சி நாக்காமுரா ஆகியோருடன் வென்றுள்ளார். இந்த நோபல் பரிசானது திறன்மை மிக்க நீலநிற ஒளியுமிழி அல்லது ஒளியீரி என்னும் குறைக்கடத்திக் கருவியைக் கண்டுபிடித்தமைக்காக வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றல் சேமிப்பைத் தரும் வெண்ணிற ஒளிதரும் ஒளிவாய்களை அமைக்க முடியும்.[2]