நாம்பு ஓச்சிரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாம்பு ஓச்சிரோ
Yoichiro Nambu
YoichiroNambu.jpg
துறை இயற்பியல்
பணி நிறுவனம் சிக்காகோ பல்கலைக்கழகம்
அறியப்படுவது தற்செயலாய் சீரொற்றுமை இழத்தல்
விருதுகள் வுல்ஃவு பரிசு
டிராக் பதக்கம்
சக்குராய் பரிசு
நோபல் பரிசு (2008)

நாம்பு ஓச்சிரோ (Nambu Yōichirō, 南部 陽一郎; பிறப்பு: ஜனவரி 18, 1921) சப்பானில் பிறந்து வளர்ந்து ஐக்கிய அமெரிக்காவில் வாழும் இயற்பியல் அறிஞர். கருத்திய இயற்பியல் துறையில், அணுவின் உட்கூறுகள் பற்றி ஆழமான ஆய்வுகள் செய்து புகழ் பெற்றவர். அணுவின் உட்கூறுகளாகிய அணுத்துகள்களின் இயக்கத்தில், தற்செயலாய் கலையும் அல்லது இழக்கும் சீரொற்றுமை பற்றி இவர் செய்த ஆய்வுக்காக, 2008 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருடன் கோபயாசி மக்கொட்டோ, மசுக்காவா தொசிடே ஆகிய இரண்டு சப்பானியரும் 2008 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்தனர்[1].

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்பு_ஓச்சிரோ&oldid=1351224" இருந்து மீள்விக்கப்பட்டது