பதிப்புரிமை
பதிப்புரிமை (Copyright) என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும்.இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும். இவ்வுரிமை ஒருவரின் ஆக்கத்திறமையைப் பாராட்டவும், பிறரின் ஆக்கத்தை ஊக்குவிப்பிதற்காகவும் தரப்படுகிறது. சிற்சில தவிர்ப்புச்சூழல்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம்.இவ்வனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.[1][2][3]
காப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிபாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஒவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
முந்திய காலங்களில் பதிப்புரிமை சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது.காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது.தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம்.
சர்வதேச பதிப்புரிமை சட்டம்
[தொகு]இலக்கிய மற்றும் கலையாக்கங்கள் பாதுகாப்புக்கான பெர்ன் மாநாடு
[தொகு]இந்த மாநாடு இலக்கிய மற்றும் கலையாக்கப் பாதுகாப்பிற்காக கூட்டப்பட்டது. இப்பாதுகாப்பு திரைப்படங்களுக்கும் பொருந்தும். இம்மாநாடு தனது அங்க நாடுகள் தமது எல்லைகளில் கலை, இலக்கிய, அறிவியல் துறைகளில் உருவாகும் ஆக்கங்களுக்கு பாதுகாப்புத்தர வலியுறுத்துகிறது. இம்மாநாடு தனது பல்வேறு முக்கிய அம்சங்களில் ஒன்றாக தேசிய நடத்துமுறையைக் கொண்டுள்ளது. இம்முறையின்படி ஒவ்வொரு அங்க நாடும் தமது குடிமக்களுக்கு தரும் பாதுகாப்பை மற்ற அங்கத்தினர் நாட்டின் குடிமக்களுக்கும் தருதல் வேண்டும்.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Definition of copyright". Oxford Dictionaries. Archived from the original on 29 September 2016. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
- ↑ "Definition of Copyright"..
- ↑ Nimmer on Copyright, vol. 2, § 8.01.