புவிசார் குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். (எ. கா) "தஞ்சாவூர் கலைத்தட்டு" தஞ்சாவூரில் செய்யப்படும் கலைநயமிக்க தட்டுகளைக் குறிப்பிடுகின்றது.”சுவிஸ் கைக்கடிகாரங்கள்”” என்ற பெயர் சுவிட்சர்லாந்து என்ற இடத்தின் நன்மதிப்பை (சுவிஸ் பொறியியலாளர்களின் திறனால் உருவானது), “கைக்கடிகாரம்” என்ற பொருளுக்கு வழங்குகிறது.

இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். [1]

இந்தியப் பொருட்கள்[தொகு]

மைசூர் வெற்றிலை, சேலம் வெண்பட்டு, டார்ஜீலிங் டீ, பாலக்காடு மட்டா அரிசி,மதுரை மல்லி முதலான 195 இந்தியப் பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.இதில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் 57. புவிசார் குறியீட்டிற்கான சட்டம் 1999ம் ஆண்டு இயற்றப்பட்டு 2003ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது[2]

தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு[தொகு]

பத்தமடை பாய், தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் வீணை, நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, மதுரை மல்லி முதலிய 24 பொருட்கள் புவிசார் குறியீடுகள் பெற்ற பொருட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது[3].

மேற்கோள்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவிசார்_குறியீடு&oldid=1777213" இருந்து மீள்விக்கப்பட்டது