தாவீது தூலீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவீது தூலீசு
David Thouless
பிறப்புதாவீது யேம்சு தூலீசு
(1934-09-21)21 செப்டம்பர் 1934
பியர்சுடன், இசுக்காட்லாந்து
இறப்பு6 ஏப்ரல் 2019(2019-04-06) (அகவை 84)
கேம்பிரிட்ச், இங்கிலாந்து
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
தேசியம்இசுக்காட்டியர்
துறைதிண்மநிலை இயற்பியல்
பணியிடங்கள்வாசிங்டன் பல்கலைக்க்ழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
பர்மிங்காம் பல்கலைக்க்ழகம்
கல்வி கற்ற இடங்கள்திரினிட்டி சாலை, கேம்பிரிட்சு
கோர்னெல் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்அன்சு பேத்து
அறியப்படுவது
  • கோசுட்டர்லிட்சு-துலீசு நிலைமாற்றம்
  • துலீசு ஆற்றல்
  • இடவியல் குவாண்டம் எண்கள்
விருதுகள்மாக்சுவெல் விருதும் பரிசும் (1973)
இலார்சு ஆன்சாகர் பரிசு (2000)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2016)[1]

தாவீது இயேம்சு தூலீசு (David James Thouless, செப்டம்பர் 21, 1934 – 6 ஏப்ரல் 2019[2]) பிரித்தானிய திண்மநிலை இயற்பியலாளர். இவர் 2016 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை தன்கன் ஃகால்டேன், சான் கோசுட்டர்லிட்சு ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார். திண்மநிலையில் இடவியல் நிலைமாற்றம் (topological phase) பற்றிய கொள்கைய கண்டுபிடிப்புகளுக்காக இவர் நோபல் பரிசைப் பெற்றார்.[3][4]. இவர் 1990 இல் உவுல்ஃபு பரிசை (Wolf Prize) இவர் செய்த சீருறா இருதிரட்சி திண்ம நிலைப் பொருள்கள் பற்றிய ஆய்வுகளுக்காக வென்றார்.

தூலீசு கேம்பிரிட்சில் உள்ள விஞ்செசுட்டர் கல்லூரி, திரினிட்டி சாலையில் இளநிலை (BA) பட்டம் பெற்றார், பின்னர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற நோபல் பரிசாளர் அன்சு பேத்தின்[5] கீழ் முனைவர்ப்பட்டம் பெற்றார். பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கிலியில் முதுமுனைவர் பதவியிலும் அதன் பின்னர் இங்கிலாந்தில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கணித இயற்பியல் துறையில் பேராசிரியராகவும் இருந்தார். அதன் பின் 1980 இல் அமெரிக்காவில் சியாட்டிலில் இருக்கும் வாசிங்கடன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார்.

தூலீசு இங்கிலாந்தின் வேந்தியக் குமுகத்தின் பேராளராகவும், அமெரிக்க இயற்பியற் குமுகத்தின் பேராளராகவும், அமெரிக்க கலை அறிவியல் அக்காதெமியின் பேராளராகவும் அமெரிக்க தேசிய அறிவியல் அக்காதெமியின் உறுப்பினரகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 1990 இல் பெற்ற உவுல்ஃபு பரிசும், 1993 இல் பெற்ற திராக்கு பரிசும் (Dirac Prize), 2000 இல் பெற்ற இலார்சு ஆன்சாகர் பரிசும், 2016 இல் பெற்ற இயற்பியல் நோபல் பரிசும் குறிப்பிடத்தகுந்தவை.

சில படைப்புகள்[தொகு]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Devlin, Hannah; Sample, Ian (2016-10-04). "British trio win Nobel prize in physics 2016 for work on exotic states of matter – live". the Guardian. பார்க்கப்பட்ட நாள் 2016-10-04.
  2. "Professor David Thouless 1934–2019". Trinity Hall, Cambridge. 6 April 2019. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.
  3. The international who's who 1991-92
  4. The Nobel Prize in Physics 2016
  5. ‘THOULESS, Prof. David James’, Who's Who 2016, A & C Black, an imprint of Bloomsbury Publishing plc, 2016

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவீது_தூலீசு&oldid=2729969" இலிருந்து மீள்விக்கப்பட்டது