உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிடேகி யுகாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிடேகி யுகாவா
பிறப்பு(1907-01-23)23 சனவரி 1907
டோக்கியோ, ஜப்பான்
இறப்பு8 செப்டம்பர் 1981(1981-09-08) (அகவை 74)
கியோட்டோ, ஜப்பான்
தேசியம்ஜப்பான்
துறைகோட்பாட்டு இயற்பியல்
பணியிடங்கள்ஒசாக்கா பல்கலைக்கழகம்
கியோட்டோ பல்கலைக்கழகம்
டோக்கியோ பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக் கழகம்
கல்வி கற்ற இடங்கள்கியோட்டோ பல்கலைக்கழகம்
தாக்கம் 
செலுத்தியோர்
என்ரிக்கோ பெர்மி
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1949)

ஹிடேகி யுகாவா(Hideki Yukawa, 23 ஜனவரி 1907 – 8 செப்டம்பர் 1981) ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர். அணுக்கருவினுள் ஏற்படும் வலிமை மிக்க அணுக்கரு விசையை உருவாக்கும் , எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான ஆதாரத் துகளைக் கண்டறிந்தவர். இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளர். ஜப்பான் நாட்டில் முதன் முதலாக நோபல் பரிசு பெற்ற அறிஞர்.

இளமை

[தொகு]

ஹிடேகி 1907 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் ஜப்பானில் டோக்கியோ பெருநகரில் பிறந்தார். இவருடைய தந்தை 'டகுஜி ஒகாவா' என்பவராவார். தான் பிறந்த ஊரிலேயே இளமைக் கல்வியைப் பெற்ற இவர் கியோடோ என்ற இடத்தில் அமைந்திருந்த கியோட்டோ இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார்.1929-லிருந்து நான்கு ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பட்டதாரியான இவர் கோட்பாட்டு இயற்பியலில் ஆர்வம் செலுத்தினார். குறிப்பாக ஆதாரத் துகளைக் (Elementary particles) கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தினார். 1932-ல் இவர் 'சுமிகோ' என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.

பணிகள்

[தொகு]

1932-39 க்கு இடைப்பட்ட கலத்தில் விரிவுரையாளராகவும், பிறகு ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அங்கு ஆய்வுகளில் ஈடுபட்ட ஹிடேகி 1935-ல் ஆதாரத் துகள்களுக்கிடையே ஏற்படும் உள்வினைகள் என்பது பற்றி இவருடைய ஆய்வறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அணுக்கரு விசைக்கான புதிய புலக் கொள்கையை உருவாக்கியிருந்தார். அதில் மெசான் என்ற பொருளின் வெளிப்பாட்டைக் குறிப்பிட்டார். 1937-ல் அமெரிக்க இயற்பியலாளர்கள் காஸ்மிக் கதிர்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகை மெசான் என்ற துகளைக் கண்டு பிடித்தது இவருடைய ஆய்வுக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது. எனவே, மெசான் கொள்கையை விரிவாக்குவதில் இவருடைய சொந்தக் கருத்துகளின் அடிப்படையில் தீவிரமாக ஈடுபட்டார். 1938-ல் இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது.1947-லிருந்து ஆதாரத் துகள்களின் பொதுக் கொள்கை அடிப்படையில் தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1948-ல் அமெரிக்காவிலும் 1949 முதல் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் வருகை தரும் பேராசிரியராக செயல்பட்டார்.

சிறப்புகள்

[தொகு]
  • ஜப்பானில் இருந்த அறிவார்ந்த கழகங்கள் இவருடைய திறமையை உணர்ந்தன. குறிப்பாக ஜப்பான் பல்கலைக் கழகம், இயற்பியல் கழகம், ஜப்பான் அறிவியல் குழு ஆகியவை இவரைத் தங்கள் உறுப்பினராக ஏற்றுக் கொண்டன. ஒசாக்கா பல்கலைக்கழகம் இவரை வருகை தந்து பாடம் பயிற்றுவிக்கும் பேராசிரியராக அமர்த்திக்கொண்டது. கியோட்டோ பல்கலைக்கழகம் அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக, இவருடைய பெயரிடப்பட்ட யுகாவா கூடத்தில் அமைந்துள்ள அதற்கான அலுவலகத்தில் இருந்து செயல்பட்டார்.
  • அமெரிக்க இயற்பியல் கழகம், அமெரிக்க தேசிய அறிவியல் கழகம் ஆகியவை இவரை தங்கள் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தன.
  • 1940-ல் ஜப்பான் கழகத்தின் இம்பீரியல் பரிசு 1943-ல் பண்பட்டை அலங்கரிக்கும் தகுதிப் பரிசு(Decoration of culturalment) ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டன.
  • இவர் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டதோடு சில நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் 'துகள்கற்றை எந்திரவியலுக்கான முன்னுரை' (Introduction to Quantum Mechanics) 1946, 'ஆதாரத் துகள் கோட்பாட்டுக்கான முன்னுரை' (Introductioan to the Theory of Elementary Particles-1948) ஆகிய இரண்டு நூல்களை ஜப்பானிய மொழியில் எழுதி வெளியிட்டார். 'கோட்பாட்டு இயற்பியல் முன்னேற்றங்கள்' என்ற தலைப்பில் வெளிவந்த ஆங்கிலப் பருவ இதழின் ஆசிரியராக இருந்தும் செயல்பட்டார்.
  • பாரிஸ் பல்கலைக் கழகம், எடின்பர்க் ராயல் கழகம், இந்திய அறிவியல் கழகம், அனைத்துலக தத்துவ மற்றும் அறிவியல் கழகம், பான்டிபிசியா அறிவியல் கழகம் ஆகியவை இவரை தங்களது அயல் நாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுத்துக் கொண்டன.
  • எலாவற்றுக்கும் மேலாக 'கியோட்டோ நகர் மதிப்பியல் குடிமகன்' (Honarary citizen of the city of Kyoto, Japan) என்ற சிறப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இவரைச் சிறப்பிக்கும் வகையில் இவருடைய உருவம் பொறித்த அஞ்சல் வில்லைகள் வெளியிடப்பட்டன.

மறைவு

[தொகு]

முதன் முதலில் ஜப்பானுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த ஹிடேகி யுகாவா 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் கியோட்டோ என்ற ஊரில் காலமானார்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

அறிவியல் ஒளி, ஜனவரி 2011 இதழ்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிடேகி_யுகாவா&oldid=2917716" இலிருந்து மீள்விக்கப்பட்டது