உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் லீவிஸ் ஹால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் லீவிஸ் ஹால்
ஹால், 2012 நோபல் பரிசுப் பெற்றவர்கள் கூட்டத்தில்
பிறப்புஆகத்து 21, 1934 (1934-08-21) (அகவை 90)
டென்வர், கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கொலராடோ பல்கலைக்கழகம் (போல்டர்), JILA, NIST
கல்வி கற்ற இடங்கள்கார்னிகி தொழில்நுட்பக்கழகம்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஜு யு
அறியப்படுவதுஒளியியல்
விருதுகள்வர்த்தக திறையின் தங்க மெடல் (1969)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2005)[1]

ஜான் லீவிஸ் ஹால் (பிறப்பு 21 ஆகத்து 1934) ஒரு அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர். இவர் சீரொளி அடிப்படையில் துல்லிய நிறமாலையியல் துறையில் செய்த ஆய்வுப் பணிக்காக 2005 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.[1] தியோடர் ஹன்சு மற்றும் ராய் கிளாபருடன் இணைந்து பரிசுத்தொகையில் நான்கில் ஒரு பகுதியை பகிர்ந்து பெற்றுக் கொண்டார்.[2]

வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

ஹால் அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாநிலத்தில் டென்வர் நகரில் பிறந்தார். கார்னிகி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மூன்று பட்டங்களை பெற்றார். 1956 இல் இளங்கலை அறிவியல் பட்டம், 1958 ஆம் ஆண்டு முதுகலை அறிவியல் பட்டம் மற்றும் 1961 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றார். முனைவர் பட்டத்திற்கு பிந்திய ஆராய்ச்சிப்பணியை வர்த்தக தர சான்று நிறுவன துறையில் முடித்தார். பின்னர் இந்த நிறுவனத்திலேயே 1962 முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலும் பணி செய்து ஓய்வு பெற்றார். 1967 முதல் கொலராடோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகும் இருந்திருக்கிறார்.

ஹால் அவர்கள் தியோடர் ஹன்சுடன் இணைந்து சீரொளி அடிப்படையில் துல்லிய நிறமாலையியல் துறைப் பற்றிய ஆராய்ச்சியில் முன்னோடிகளாக இருந்தமைக்காக 2005 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசில் பாதித் தொகை கிடைத்தது. ஹால் பரிசுத் தொகையை தியோடருடன் பாதி பகிர்ந்து கொண்டார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_லீவிஸ்_ஹால்&oldid=2918762" இலிருந்து மீள்விக்கப்பட்டது