ஜார்ஜோ பரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜோ பரிசி
Giorgio Parisi
பிறப்பு4 ஆகத்து 1948 (1948-08-04) (அகவை 75)
உரோம், இத்தாலி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்சப்பீன்சா பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
கல்விசப்பீன்சா பல்கலைக்கழகம் (BS, MS, PhD)
அறியப்படுவதுபுள்ளியியல் எந்திரவியல், குவாண்டம் புலக்கோட்பாடு, தற்சுழற்சிக் கண்ணாடி
விருதுகள்போல்ட்சுமன் பதக்கம்
திராக் பதக்கம்
என்ரிக்கோ பெர்மி பரிசு
டானி ஐன்மன் பரிசு
இலக்கிராஞ்சி பரிசு
மேக்ஸ் பிளாங்க் பதக்கம்
உவூல்ஃப் பரிசு
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2021)

ஜார்ஜோ பரிசி (Giorgio Parisi, பிறப்பு: 4 ஆகத்து 1948) ஓர் இத்தாலியக் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார் இவரது ஆராய்ச்சி குவாண்டம் புலக்கோட்பாடு, புள்ளியியல் எந்திரவியல் மற்றும் கூட்டு அமைப்புகளில் கவனம் செலுத்தியுள்ளது. அணுவிலிருந்து கிரக அளவுகள் வரை அவற்றின் அமைப்புகளின் மாறுபாடு மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியைக் கண்டறிந்ததற்காக 2021 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினை கிளாவுசு ஆசெல்மான், சியூக்குரோ மனாபே ஆகியோருடன் இணைந்து பெற்றார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

ஜார்ஜோ பரிசி 1970 இல் ரோம் லா சபியன்சா பல்கலைக்கழகத்தில் நிக்கோலா கேபிபோவின் மேற்பார்வையின் கீழ் பட்டம் பெற்றார். இவர் தேசிய பிராசுகாடி ஆய்வகத்தில் 1971 ஆம் ஆண்டு முதல் 1981 வரை ஆராய்ச்சியாளராக இருந்தார் , உயர்நிலை அறிவியல் கல்வி நிறுவனம் (1976-1977), கொலம்பியா பல்கலைக்கழகம் (1973-1974) , மற்றும் எக்கோல் நார்மால் சூப்பிரியர் (1977-1987) ஆகியவற்றில் வருகைதரு விஞ்ஞானியாகவும் இருந்தார். 1981 முதல் 1992 வரை அவர் கோட்பாட்டுவாத இயற்பியல் துறையில் ஒரு முழு நேர பேராசிரியராக ரோம் தோர் வெர்கதா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இவர் தற்போது குவாண்டம் புலக்கோட்பாடு பேராசிரியராக ரோம் செர்பியான்சா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். 2018 இல், இவர் அகாடெமியா டீ லின்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

கௌரவங்களும் விருதுகளும்[தொகு]

ஜார்ஜோ பரிசி அகாடெமியா டீ லின்சியின் உறுப்பினரும், அமெரிக்க தத்துவ சமூகம் ,[2] மற்றும் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதமி ,[3] பிரெஞ்சு அறிவியல் அகாதமி ஆகியவற்றின் அயல் நாட்டு உறுப்பினரும் ஆவார்,[4]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜோ_பரிசி&oldid=3507906" இருந்து மீள்விக்கப்பட்டது