தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ்
தியோடர் ஹன்சு, 2012 நோபல் பரிசுப் பெற்றவர்கள் கூட்டத்தில்
பிறப்பு30 அக்டோபர் 1941 (1941-10-30) (அகவை 82)
ஹெய்டில்பர்க், ஜெர்மனி
தேசியம்ஜெர்மனி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்லுடுவிக் மேக்ஸ்மில்லன் பல்கலைகழகம்
மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனம்
ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகம்
நேரியல் அல்லாத நிறமாலையியலுக்கான ஐரோப்பிய ஆய்வகம் (LENS), Università degli Studi di Firenze]]
கல்வி கற்ற இடங்கள்ஹைடில்பர்க் பல்கலைகழகம்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
Carl E. Wieman
Markus Greiner
Immanuel Bloch
Tilman Esslinger
அறியப்படுவதுசீரொளி-அடிப்படையிலான துல்லிய நிறமாலையியல்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (2005)[1]
மைக்கேல்சன் பதக்கம் (1986)
இயற்பியலுக்கான கோம்ஸ்டாக் பரிசு
கையொப்பம்

தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ் (பிறப்பு 30 ஆக்டோபர் 1941) ஒரு ஜெர்மனிய இயற்பியலாளர் மற்றும் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர். இவர் 2005 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு சீரொளி அடிப்படையில் துல்லிய நிறமாலையியல் துறையில் செய்த ஆய்வுப் பணிக்காக கிடைத்தது.[1] ஜான் லி.ஹால் மற்றும் ராய் கிளாபருடன் இணைந்து பரிசுத்தொகையில் நான்கில் ஒரு பகுதியை பகிர்ந்து பெற்றுக் கொண்டார்.

கல்வி மற்றும் ஆராய்ச்சிப்பணி[தொகு]

ஹான்ஸ் மேக்ஸ் பிளான்க் நிறுவனத்தின் குவான்டம் ஒளியியல் பிரிவின் இயக்குனராக இருந்தார் மற்றும் பரிசோதனை இயற்பியல் மற்றும் சீரொளி நிறமாலையியல் துறையில் பேராசிரியராக லுடுவிக் மேக்ஸ்மில்லன் பல்கலைகழகம், முனிச், ஜெர்மனியில் இருந்தார்.

1960 ஆம் ஆண்டில் ஹான்ஸ் தனது பட்டயம் மற்றும் முனைவர் பட்டம் இரண்டையும் ரூபிரிசட்-கார்ல்ஸ் பல்கலைகழகம், ஹெடில்பர்க்கில் பெற்றார். அதனை தொடர்ந்து 1975 முதல் 1986 ஆம் ஆண்டு வரையில் ஸ்டான்போர்டு பல்கலைகழகம், கலிபோர்னியாவில் பேராசிரியராக இருந்தார். 1983 ஆம் ஆண்டு இவருக்கு தேசிய அறிவியல் கழகம் இயற்பியலுக்கான கோம்ஸ்டாக் விருது அறிவித்தது.[2] 1986 ஆம் ஆண்டு பிரான்களின் நிறுவனத்தின் ஆல்பிரட் மைக்கேல்சன் பதக்கம் வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 https://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2005/
  2. "Comstock Prize in Physics". National Academy of Sciences. Archived from the original on 29 December 2010. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.
  3. "Franklin Laureate Database - Albert A. Michelson Medal Laureates". Franklin Institute. Archived from the original on April 6, 2012. பார்க்கப்பட்ட நாள் June 16, 2011.

வெளி இணைப்புகள்[தொகு]