ஆர்தர் காம்ப்டன்
ஆர்தர் காம்ப்டன் | |
---|---|
![]() 1927இல் ஆர்தர் காம்ப்டன் | |
பிறப்பு | ஆர்தர் ஒலி காம்ப்டன் செப்டம்பர் 10, 1892 உவூற்றர், ஒகியோ, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | மார்ச்சு 15, 1962 பெருக்கலி, கலிபோர்நியா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 69)
தேசியம் | ஐக்கிய அமெரிக்கர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | புனித உலூயிசிலுள்ள உவோசிங்குட்டன் பல்கலைக்கழகம் சிக்காகோப் பல்கலைக்கழகம் மின்னசொட்டாப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | உவூற்றர் கல்லூரி பிரின்சுட்டன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | எரவாடு எல். குக்கு |
முனைவர் பட்ட மாணவர்கள் | உலூயிசு உவோற்றர் அல்வாரெசு வின்சுற்றன் எச்சு. பாசுற்றிக்கு உறொபேட்டு எசு. சாங்கிலாந்து சொய்சு ஏ. பேடன் உவூ இயூட்சன் |
அறியப்படுவது | காம்ப்டன் சிதறல் காம்ப்டன் அலைநீளம் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1927) மட்டூச்சி பதக்கம் (1930) பிராங்கிளின் பதக்கம் (1940) இயூசு பதக்கம் (1940) |
துணைவர் | பெற்றி சரிற்றி மக்குளோசுக்கி |
பிள்ளைகள் | ஆர்தர் அலன் சோன் சோசப்பு |
கையொப்பம் | |
குறிப்புகள் | |
வில்சன் காம்ப்டன், காள் காம்ப்டன் ஆகியோர் உடன்பிறப்பாவார். |
ஆர்தர் காம்ப்டன் (Arthur Holly Compton, செப்டம்பர் 10, 1892 – மார்ச் 15, 1962) அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். மின்காந்த அலைகளின் துகள் தன்மையை விளக்கும் இவருடைய கண்டுபிடிப்பான காம்ப்டன் விளைவிற்காக இவருக்கு 1927இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மாக்சு பிளாங்க் என்னும் செருமானிய இயற்பியலாளர் பொருள் ஒளியையும் வெப்பத்தையும் தொடர்ச்சியாக உமிழ்வதில்லையென்றும் தனித்தனித் துணுக்குகளாக வீசி வெளிப்படுத்துகிறது என்ற கோட்பாட்டை 1900 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 1911 ஆம் ஆண்டில் எர்னஸ்ட் ரூதர்போர்டு அணு அமைப்பு பற்றிய கோட்பாட்டை வெளியிட்டார். ஆனால் செவ்விய வெப்ப இயக்கவியலால் இவரது கோட்பாட்டை விளக்கமுடியவில்லை. நீல்சு போர் 1913 ஆம் ஆண்டில் பிளாங்கின் கோட்பாட்டின் அடிப்படையில் ரூதர்போர்டின் அணுக்கோட்பாட்டை விளக்குவதில் வெற்றி கண்டார். ஆனாலும், குவாண்டம் பற்றிய கோட்பாடு இயற்பியலாளர் தம் கற்பனைக்கு கொடுத்த உருவமா என்ற கேள்வியும் இருந்தது. காம்ப்டனின் ஆய்வுகள் ஒளியின் துகள் தன்மையைக் குவாண்டம் கோட்பாட்டியலாக நிறுவுவதற்கான இன்றியமையாத ஒன்றாகக் கொள்ளப்பட்டது. காம்ப்டன் 1920 ஆம் ஆண்டல் குறைந்த அணு எடை கொண்ட பொருள்களில் எக்சு கதிரைச் செலுத்திய போது மோதும் கதிர்களில் பெரும்பகுதி சிதறுவதைக் கண்டார். பொருளிலிருந்து வெளிப்படும் இரண்டாம் நிலைக் கதிர்கள் பொருளின் மீது மோதிய முதல் நிலைக் கதிர்களிலிருந்து பெரிதும் மாறுபட்டிருப்பதைக் கண்டார்.
இரண்டாம் உலகப் போரின் போதுமுதலாவது அணுக்கரு ஆயுதங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்ட மன்காட்டன் குழுவில் இவர் பெரும் பங்காற்றினார். 1942 இல் இவர் உலோகவியல் ஆய்வுகூடத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். யுரேனியத்தை புளூட்டோனியமாக மாற்றும் அணுக்கரு உலைகள் தயாரிப்பில் இவ்வாய்வுகூடம் முக்கிய பங்களிப்பு செய்தது. காம்ப்டன் 1945இல் சப்பானுக்கு எதிராக அணுகுண்டு பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கும் குழுவில் இருந்தார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Recommendations on the Immediate Use of Nuclear Weapons". nuclearfiles.org. July 27, 2013 அன்று பார்க்கப்பட்டது.