தன்கன் ஆல்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்கன் ஃகால்டேன்
F. Duncan Haldane
பிறப்புசெப்டம்பர் 14, 1951 (1951-09-14) (அகவை 72)[1]
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
துறைதிண்மநிலை கொள்கை
பணியிடங்கள்பிரின்சிட்டன் பல்கலைக்கழகம்
பெல் செய்களச்சாலைகள்
கல்வி கற்ற இடங்கள்கிறித்தின் கல்லூரி, கேம்பிரிட்சு (Christ's College, Cambridge)
அறியப்படுவதுபின்ன குவாண்டம் ஃகால் விளைவில் ஃகால்டேனின் ஈடுமதிப்பு மின்னழுத்தங்கள் (Haldane pseudopotentials)
விருதுகள்ஆலிவர் இ. பக்கிலி திண்மநிலைப் பரிசு (1993)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2016)
இணையதளம்
physics.princeton.edu/~haldane/

பிரெடரிக்கு தன்கன் மைக்கேல் ஆல்டேன் (Frederick Duncan Michael Haldane, வேந்தியக் குமுகப் பேராளர் FRS, பிறப்பு: செப்டம்பர் 14, 1951) ஒரு பிரித்தானிய இயற்பியலாளர். இவர் ஐக்கிய அமெரிக்காவில் பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் இயூச்சீன் ஃகிகின்சு இயற்பியல் பேராசிரியராக (Eugene Higgins Professor of Physics) இருக்கின்றார். கனடாவில் வாட்டர்லூவில் உள்ள பெரிமீட்டர் இயற்பியல் கழகத்தில் வருகைதரு சிறப்புறு ஆய்வுத்தலைவராகவும்[2] இருக்கின்றார். 2016 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை சான் கோசுட்டர்லிட்சு, தாவீது தூலீசு ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார்.[3]

இவர் இலண்டலில் புனித பவுல் பள்ளையில் படித்தார், பின்னர் கேம்பிரிட்சில் கிறித்துவின் கல்லூரியில் படித்தார். [4] திண்மநிலை இயற்பியல் துறையில் பலவகையான அடிப்படையான ஆய்வுக் கண்டுபிடிப்புகளுக்காக நன்கு அறியப்பட்டவர். குறிப்பாக இலூத்திங்கர் நீர்மம், ஒற்றைத் திரட்சி தற்சுழற்சிச் சங்கிலிகள், பின்ன குவாண்டம் ஃகால் விளைவு முதலானவற்றைச் சுட்டலாம். இலண்டனின் வேந்தியக் குமுகத்தின் பேராளராகவும், அமெரிக்கக் கலை அறிவியல் அக்காதெமியின் பேராளராகவும், அமெரிக்க இயற்பியல் குமுகத்தின் பேராளராகவ்வும், ஐக்கிய இராச்சியத்தின் இயற்பியல் கழகத்தின் பேராளராகவும் அமெரிக்க அறிவியல் முன்னேற்றத்துக்கான கழகத்தின் பேராளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1993 இல் அமெரிக்க இயற்பியல் குகுகத்தின் பக்கிலி பரிசு என்னும் ஆலிவர் பக்கிலி திண்மநிலைப் பரிசை வென்றுள்ளார்; 1984-88 காலப்பகுதியில் ஆஃபிரடு பி. சுலோன் நிறுவனத்தின் ஆய்வுப் பேராளராகவும், 2008 ஆம் ஆண்டு இலாரன்சு தலைவராகவும் இருந்திருக்கின்றார், 2012 இல் திராக்குப் பதக்கத்தையும் 2016 இல் நோபல் பரிசையும் வென்றுள்ளார்[5].

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்கன்_ஆல்டேன்&oldid=3628213" இருந்து மீள்விக்கப்பட்டது