எலிசபெத் பிளாக்பர்ன்
Appearance
எலிசபெத் பிளாக்பர்ன் Elizabeth Blackburn | |
---|---|
பிறப்பு | நவம்பர் 26, 1948 ஹோபார்ட், தாஸ்மானியா, ஆஸ்திரேலியா |
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | ஆஸ்திரேலிய, அமெரிக்க இரட்டைக் குடியுரிமை |
துறை | மூலக்கூற்று உயிரியல் |
பணியிடங்கள் | யேல் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி), கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் பிரான்சிஸ்கோ, Salk Institute |
கல்வி கற்ற இடங்கள் | மெல்பேர்ண் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | கரொல் கிரெய்டர் உட்பட |
விருதுகள் | நோபல் மருத்துவப் பரிசு (2009) |
எலிசபெத் எலன் பிளாக்பர்ன் (Elizabeth Helen Blackburn, பிறப்பு: நவம்பர் 26, 1948) என்பவர் சான் பிரான்சிஸ்கோ நகரின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆய்வாளர் ஆவார்[1]. ஆஸ்திரேலியாவின் தாஸ்மானியாவில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர். இவர் நிறப்புரிகளைப் பாதுகாக்கும் முனைக்கூறுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டவர். நிறப்புரிகளின் முனைகளில் காணப்படும் முனைக்கூறுகளும், டெலொமியர்களை உருவாக்கப் பயன்படும் டெலொமெரேஸ் என்ற நொதியமுமே நிறப்புரிகளைப் பாதுகாக்கின்றன என்று பிளாக்பெர்ன் தலைமையிலான குழு கண்டுபிடித்தது. இக்கண்டுபிடிப்புக்காக 2009 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இவருக்கும், இவரது குழுவைச் சேர்ந்த கரோல் கிரெய்டர், மற்றும் ஜாக் சொஸ்டாக் ஆகிய இருவருக்கும் சேர்த்து பகிர்ந்தளிக்கப்பட்டது[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""Elizabeth H. Blackburn - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ The Nobel Prize in Physiology or Medicine 2009, நோபல்பரிசு.ஒர்க், அக்டோபர் 5, 2009
வெளி இணைப்புகள்
[தொகு]- Nobel Prize information
- University biography பரணிடப்பட்டது 2008-02-14 at the வந்தவழி இயந்திரம்
- Short biography at Harvard
- Interview on Australian ABC Radio In Conversation, March 2007.
- Authors@Google: Elizabeth Blackburn. Blackburn explains the science of telomeres. August 20, 2008.
- Authors@Google: Catherine Brady. Discusses her book Elizabeth Blackburn and the Story of Telomeres: Deciphering the Ends of DNA. June 25, 2008.