டேனியல் போவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேனியல் போவெட்
பிறப்புமார்ச்சு 23, 1907(1907-03-23)
சுவிட்சர்லாந்து
இறப்பு8 ஏப்ரல் 1992(1992-04-08) (அகவை 85)
ரோம், இத்தாலி
வாழிடம்இத்தாலி
தேசியம்இத்தாலியன்
துறைமருந்தாக்கவியல்
விருதுகள்உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு (1957)

டேனியல் போவே (Daniel Bovet, 23 மார்ச் 1907 - 8 ஏப்ரல் 1992) என்பவர் 1957ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர். நரம்புக்கடத்திகளின் நடவடிக்கைகளை தடுக்க மருந்துகள் கண்டுபிடித்தமைக்காக இவர் இப்பரிசைப் பெற்றார். மருந்தாக்கவியல் துறையைச் சேர்ந்தவர். இவர் சுவிட்சர்லாந்தில் பிறந்து இத்தாலிக்கு குடிபெயர்ந்தார்.

இவர் 1927ஆம் ஆண்டு ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின் 1929ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

1965ல் புகைபிடிப்போரின் அறிவுத்திறன் வளர்கிறது என்ற ஆய்வை தனது ஆய்வுக் குழு மூலம் முன்வைத்தார்[1]. 1929 முதல் 1947 வரை பாரிஸில் உள்ள பாஸ்டியர் நிருவனத்தில் பணியாற்றினார். 1947 முதல் ரோமின் தேசிய சுகாதார நிருவனத்தில் பணியாற்றினார். 1964இல், சசாரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனார்.1969 முதல் 1971 வரை ரோமின் தேசிய ஆராய்ச்சிக் கவுன்சிலிலும் பின் 1982 வரை ரோமின் சாபியென்ஸா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

போவெட் தனது குடும்பத்தினருடன்[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_போவே&oldid=3581425" இருந்து மீள்விக்கப்பட்டது