கார்ல் பெர்டினான்ட் கோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்ல் பெர்டினான்டு கோரி
Carl Ferdinand Cori.jpg
கார்ல் பெர்டினான்டு கோரி
பிறப்புதிசம்பர் 5, 1896(1896-12-05)
பிராகா
இறப்புஅக்டோபர் 20, 1984(1984-10-20) (அகவை 87)
கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ்
தேசியம்ஆத்திரிய-அங்கேரியர்
துறைஉயிர்வேதியியலாளர்
பணியிடங்கள்வாசிங்டன் பல்கலைக்கழகம், செயின்ட் லூயி
கல்வி கற்ற இடங்கள்பர்சுட்டு பாகல்ட்டி ஆப் மெடிசின், சாரலசு பல்கலைக்கழகம், பிராகா
அறியப்படுவதுகிளைக்கோசன்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1947)
வில்லர்டு கிப்சு விருது (1948)
1947இல் கோரியும் அவரது மனைவியும் உடன்-நோபல் பரிசு பெற்றவருமான கெர்டி கோரியும்.

கார்ல் பெர்டினான்டு கோரி, (Carl Ferdinand Cori) பிரித்தானிய இராச சமூகத்தின் வெளிநாட்டு அறிஞர் (ForMemRS),[1] (திசம்பர் 5, 1896 – அக்டோபர் 20, 1984) செக் நாட்டின் பிராகாவில் (அப்போது ஆஸ்திரியா-அங்கேரி, தற்போது செக் குடியரசு) பிறந்த உயிர்வேதியியலாளரும் மருந்தியல் வல்லுநருமாவார்.[2][3] தமது மனைவி கெர்டி கோரியுடனும் அர்கெந்தீனாவின் மருத்துவர் பெர்னார்டோ ஊசேயுடனும் இணைந்து 1947இல் நோபல் பரிசு பெற்றார்.[4][5][6][7][8] கிளைக்கோசன் (விலங்கு மாச்சத்து) – குளுக்கோசின் ஓர் வழிப்பொருள்– உடலில் எவ்வாறு உடைக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது என்றும் பின்னர் ஆற்றல் வழங்க எவ்வாறு மீளிணைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது என்றும் கண்டறிந்தமைக்காக மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கார்போவைதரேட்டு வளர்சிதை மாற்றத்தை தெளிவாக்கியப் பணிக்காக 2004இல் இணையர் இருவருமே தேசிய வேதியியல் வரலாற்று அடையாளங்களாக தகவேற்பு பெற்றனர்.[9]

மேற்சான்றுகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]