தூ யூயூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தூ யூயூ
Tu Youyou
屠呦呦
Tu Youyou 5012-2015.jpg
பிறப்புதிசம்பர் 30, 1930 (1930-12-30) (அகவை 91)
நிங்போ, செச்சியாங், சீன மக்கள் குடியரசு
வாழிடம்நிங்போ
தேசியம்சீனர்
துறைமருத்துவம்
மருத்துவ வேதியியல்
பணியிடங்கள்சீன மருத்துவ ஆய்வுக்கான சீனக் கல்விக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பெய்ஜிங் மருத்துவக் கல்லூரி
அறியப்படுவதுமரபுசார்ந்த சீன மருத்துவம்
சீன மூலிகையியல்
விருதுகள்ஆல்பர்ட் லாசுக்கர் விருது (2011)
வாரன் ஆல்ப்பர்ட் பரிசு (2015)
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2015)

தூ யூயூ (Tu Youyou, சீனம்: 屠呦呦; பிறப்பு: 30 டிசம்பர் 1930), சீன மருத்துவ அறிவியலாளரும், மருந்தாக்க வேதியியலாளரும், கல்வியாளரும் ஆவார். இவர் மலேரியாவைக் குணப்படுத்த ஆர்ட்டெமிசினின் என்ற புதிய மருந்தைக் கண்டுபிடித்தமைக்காக அறியப்படுகிறார். மலேரியாவுக்கான இச்சிகிச்சை முறை 20 ஆம் நூற்றாண்டின் வெப்பமண்டல மருத்துவத்தில் ஒரு பெரும் சாதனை எனக் கருதப்படுகிறது. இவரது இக்கண்டுபிடிப்புக்காக இவருக்கு 2015 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசின் பாதித்தொகை இவருக்கும், மீதமான தொகை ஒட்டுண்ணியால் ஏற்படும் நோயைக் குணப்படுத்த மருந்து கண்டுபிடித்தமைக்காக வில்லியம் சி. கேம்பல், சத்தோசி ஓமுரா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூ_யூயூ&oldid=2013120" இருந்து மீள்விக்கப்பட்டது