அசீசு சாஞ்சார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசீசு சாஞ்சார்
Aziz Sancar
Aziz Sancar 0060.jpg
பிறப்புசெப்டம்பர் 8, 1946 (1946-09-08) (அகவை 76)
சவூர், துருக்கி
தேசியம்துருக்கியர்
துறைஉயிர்வேதியியல், மூலக்கூற்று உயிரியல், டி. என். ஏ. சீராக்கல்
கல்வி கற்ற இடங்கள்MD (இசுதான்பூல் பல்கலைக்கழகம், 1969)
முனைவர் (டெக்சாசு பல்கலைக்கழகம், 1977)
விருதுகள்வேபி கோச் விருது, 2007
வேதியியலுக்கான நோபல் பரிசு, 2015

அசீசு சாஞ்சார் (Aziz Sancar, பிறப்பு: 1946) துருக்கிய அமெரிக்க உயிர் வேதியியல் அறிவியலாளர் ஆவார். மூலக்கூற்று உயிர்வேதியியல் வல்லுநரான இவர் டி. என். ஏ. சீராக்கல் [1] ஆய்வுகளுக்காக அறியப்படுகிறார்.[2]. டி. என். ஏ. பொருந்தாமையை சீர்ப்படுத்திய ஆய்வுகளுக்காக இவருக்கும், சுவீடனைச் சேர்ந்த தோமசு லின்டால், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பவுல் மோட்ரிச் ஆகியோருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது.[3][4]. ஒளிவினை நொதி மற்றும் பாக்டிரியாக்களின் நியூக்ளியோடைடுகளை வெட்டி பழுதுபார்த்தல் போன்ற துறைகளிலும் இவருடைய பங்களிப்புகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Carroll SB; Wessler SR; Griffiths AJFl; Lewontin RC (2008). Introduction to genetic analysis. New York: W.H. Freeman and Co. பக். 534. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7167-6887-9. 
  2. http://www.med.unc.edu/biochem/asancar
  3. "DNA repair wins chemistry Nobel". 7 அக்டோபர் 2015. 7 அக்டோபர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "The Nobel Prize in Chemistry 2015". www.nobelprize.org. 2015-10-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீசு_சாஞ்சார்&oldid=2713487" இருந்து மீள்விக்கப்பட்டது