உள்ளடக்கத்துக்குச் செல்

ராபர்ட் ராபின்சன் (வேதியலாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் இராபர்ட் ராபின்சன்
Sir Robert Robinson
அரசக் கழகத் தலைவர்
பதவியில்
1945–1950
முன்னையவர்சர் என்றி ஆரெட் டேல்
பின்னவர்எட்கார் ஏட்ரியன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1886-09-13)13 செப்டம்பர் 1886
டார்பிசயர், இங்கிலாந்து
இறப்பு8 பெப்ரவரி 1975(1975-02-08) (அகவை 88)
பக்கிங்காம்சயர், இங்கிலாந்து
குடியுரிமைஐக்கிய இராச்சியம்
தேசியம்ஆங்கிலேயர்
அறிவியல் பணி
துறைகரிம வேதியியல்[1]
பணியிடங்கள்சிட்னி பல்கலைக்கழகம்
லிவர்பூல் பல்கலைக்கழகம்
பிரித்தானிய டைசுடப்சு திணைக்களம்
மான்செஸ்டர் பல்கலைக்கழகம்
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மான்செஸ்டர் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்வில்லியம் என்றி பெர்க்கின், இளை.
முனைவர் பட்ட 
மாணவர்கள்
சர் எட்வர்டு ஆபிரகாம்[2]
ஆர்தர் யோன் பெர்ச்
உவில்லியம் சேஜ் ராப்சன்
கே. வெங்கட்ராமன்[3]
அறியப்படுவதுகரிமத் தொகுப்பு உருவாக்கம்[1]
விருதுகள்டேவி பதக்கம் (1930)
அரசப் பதக்கம் (1932)
கோப்லி பதக்கம் (1942)
வேதியியலுக்கான நோபல் பரிசு (1947)
பிராங்கிளின் பதக்கம் (1947)
ஆல்பர்ட் பதக்கம் (1947)
பரடே விரிவுரைப் பரிசு (1947)
துணைவர்கெர்ட்ரூட் ராபின்சன்

சர் ராபர்ட் ராபின்சன் OM PRS FRSE[4] (13 செப்டம்பர் 1886 – 8 பெப்ரவரி 1975) ஒரு பிரித்தானிய கரிம வேதியியயலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர். தாவர சாயப் பொருட்களான (ஆந்தோசயனிங்கள்) மற்றும் (ஆல்களாய்டுகள்) பற்றிய ஆராய்ச்சிக்காக 1947 இல் நோபல் பரிசு பெற்றார். மேலும் 1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர பதக்கம், வெள்ளி பனை பெற்றார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

அவர் செஸ்டர்பீல்ட், டெர்பிஷையர் அருகிலுள்ள ரஃபொர்ட் பண்ணை வீட்டில்[5] பிறந்தார். தந்தை ஜேம்ஸ் பிராட்புரி ராபின்சன், அறுவை சிகிச்சை சுத்திகரிப்பு பொருட்கள் தயாரிப்பவர், தாய், ஜேன் டேவன்போர்ட்.[6]

ராபின்சன் செஸ்டர்பீல்ட் இலக்கணப் பள்ளி மற்றும் ஃபல்னெக் தனியார் பள்ளியில் ஆரம்ப கல்வி பயின்றார். பின்னர் அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டம் பெற்றார், 1905 இல் BSc பட்டம் பெற்றார். 1907 இல் 1851 ஆராய்ச்சியாளர் பட்டம் ராயல் கமிஷன் கண்காட்சி 1851 இடம் பெற்றார்[7]. தனது ஆராய்ச்சியை மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார்.

அவர் தூய மற்றும் பயன்படுத்தப்படும் கரிம வேதியியல் பிரிவின் முதல் பேராசிரியராக சிட்னி பல்கலைக்கழகத்தில் உள்ள வேதியியல் பள்ளியில் 1912 இல் நியமிக்கப்பட்டார்.[8] அவர் பின்னர் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் (1920-22) இல் பணியாற்றினார். பின்னர் மான்செஸ்டர் பல்கலைக்கழக கரிம வேதியியல் துறையில் தலைமை பொறுப்பேற்றார்.. 1928 இல் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 1930 இல் இருந்து அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகவும், மக்டாலின் கல்லூரி, ஆக்ஸ்போர்டில் ஆராய்ச்சி மாணவராகவும் திகழ்ந்தார்.

ஆக்ஸ்போர்டில் உள்ள அறிவியல் பகுதிக்கு ராபின்சன் பெயர் சூட்டப் ப்ட்டுள்ளது,[9]

ராபின்சன் ஒருசதுரங்க வீரர்.

ஆராய்ச்சி

[தொகு]

அவரது ட்ரோபினோனின் தயாரிப்பு கோக்கைனுக்கு ஒரு முன்னோடியாகும்.1917 இல் ஆல்கலாய்டு வேதியியலைக் கண்டறிந்ததோடு, ஓருலைத் தொகுப்புமுறையில் அடுக்கை விளைவு வாயிலாக பைசைக்ளிக் மூலக்கூறுகள் உருவாக்கும் திறனையும் கண்டறிந்தார்.[10] [11]

Tropinone synthesis
Tropinone synthesis

1923 ஆம் ஆண்டில் புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் வேளையில் பென்ஸினில் நடுவில் ஒரு வட்டம் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். எலக்ட்ரான் இயக்கத்தைக் குறிக்கும் சுருள் அம்புப் பயன்பாட்டைக் கண்டறிந்தார். மேலும், அவர் மார்ஃபீன் மற்றும் பென்சிலின் மூலக்கூறு அமைப்புகளைக் கண்டுபிடித்துள்ளார்.[12] ராபின்சன் அன்னுலேசன் ஸ்டெராய்டுகளின் உற்பத்தியில் பயன்படுகிறது.

1957 இல் ராபின்சன் டெட்ராஹெட்ரான் இதழை நிறுவினார்.

வெளியீடுகள்

[தொகு]
  • The Structural Relationship of Natural Products (1955)

குடும்பம்

[தொகு]

அவர் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டார். 1912 ஆம் ஆண்டில், ஜெர்டுடு மௌத் வால்ஷை மணந்தார். 1954 இல் அவரது மரணத்தைத் தொடர்ந்து, 1957-ல் திருமதி ஸ்டெர்ன் சில்வியா ஹில்ஸ்ட்ரோம் (நீ ஹெர்ஷே).[13] என்ற விதவையைத் திருமணம் செய்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Saltzman, M. D. (1987). "The development of Sir Robert Robinson's contributions to theoretical organic chemistry". Natural Product Reports 4: 53. doi:10.1039/NP9870400053. 
  2. "Some substituted peptides and Experiments with lysozyme". University of Oxford. பார்க்கப்பட்ட நாள் 3 June 2017.
  3. Anand, Nitya (2018-05-22). "Krishnaswami Venkataraman (1901–1981)" (PDF). Indian National Science Academy. பார்க்கப்பட்ட நாள் 2018-05-22.
  4. Alexander R. Todd, Baron Todd; John Cornforth (1976). "Robert Robinson. 13 September 1886 – 8 February 1975". Biographical Memoirs of Fellows of the Royal Society 22: 414–527. doi:10.1098/rsbm.1976.0018. 
  5. "Former RSE Fellows 1783–2002" (PDF). Royal Society of Edinburgh. Archived from the original (PDF) on 28 ஆகஸ்ட் 2008. பார்க்கப்பட்ட நாள் 31 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Biographical Index of Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002 (PDF). The Royal Society of Edinburgh. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.
  7. 1851 ராயல் கமிஷன் சென்னை
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-13. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.
  9. "Science Area". www.ox.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 12 June 2009.
  10. Robinson, R. (1917). "LXIII. A Synthesis of Tropinone". Journal of the Chemical Society, Transactions 111: 762–768. doi:10.1039/CT9171100762. 
  11. Birch, A. J. (1993). "Investigating a Scientific Legend: The Tropinone Synthesis of Sir Robert Robinson, F.R.S". Notes and Records of the Royal Society of London 47: 277–296. doi:10.1098/rsnr.1993.0034. 
  12. Abraham, E. P. (1987). "Sir Robert Robinson and the early history of penicillin". Natural Product Reports 4 (1): 41–46. doi:10.1039/np9870400041. பப்மெட்:3302773. 
  13. Biographical Index of Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002 (PDF). The Royal Society of Edinburgh. July 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 902 198 84 X. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.

வெளி இணைப்புகள்

[தொகு]