எலியாஸ் ஜேம்ஸ் கோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எலியாஸ் ஜேம்ஸ் "ஈ. ஜே" கோரி (Elias James "E.J." Corey அரபு மொழி: إلياس جيمس خوري‎  ; பிறப்பு ஜூலை 12, 1928) ஓர் அமெரிக்க-லெபனான் கரிம வேதியியலாளர் ஆவார் . 1990 ஆம் ஆண்டில், வேதியியலுக்கான நோபல் பரிசை " கரிமத் தொகுப்பின் கோட்பாடு மற்றும் வழிமுறையின் வளர்ச்சி" என்பதற்காக வென்றார், [1] மிகச் சிறந்த வேதியியலாளர்களில் ஒருவராக பலரால் கருதப்படும் அவர், ஏராளமான செயற்கை உலைகள், வழிமுறைகள் மற்றும் மொத்த தொகுப்புகள் போன்றவற்றினை உருவாக்கியுள்ளார். மேலும் கரிம தொகுப்பு அறிவியலின் வளர்ச்சிக்காக இவர் பங்களித்துள்ளார்.

சுயசரிதை[தொகு]

பாஸ்டனுக்கு வடக்கே உள்ள மெத்தூயன், மாசசூசெட்சில் இருந்து குடியேறிய கிறித்துவக் குடும்பத்தில் இவர் பிறந்தார். [2] இவர் பிறந்த பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு இவரது தந்தை இறந்தார். அவரது நினைவாக இவருக்கு தந்தையின் பெயரான எலியாஸ் என்பதை இவரது தாய் இவரது பெயருடன் இணைத்தார்.இவரது தாய், சகோதரர், இரண்டு சகோதரிகள் மற்றும் அத்தை மற்றும் மாமா அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பெரும் பொருலியல் வீழ்ச்சியினை எதிர்கொண்டனர் . ஒரு சிறுவனாக, இருந்த போது மென்பந்து, கால்பந்து மற்றும் ஹைகிங் போன்ற விளையாட்டுகளை விளையாடினார். அவர் ஒரு கத்தோலிக்க தொடக்கப்பள்ளியிலும், மாசசூசெட்ஸின் லாரன்ஸ் நகரில் உள்ள லாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார் .

16 வயதில் கோரே மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் நுழைந்தார், அங்கு அவர் 1948 இல் இளங்கலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் இரண்டையும் பெற்றார் . 1951 இல் பேராசிரியர் ஜான் சி. ஷீஹானினின் வழிகாட்டுதலில் இவர் முனைவர் பட்டம் பெற்றார். வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, பேராசிரியர் ஜான் சி. ஷீஹானின் அழைப்பின் பேரில், இவர் அர்பானா-சாம்பேனில் உள்ள இலினொய் பல்கலைக்கழகத்தில் நியமனம் பெற்றார். அங்கு அவர் 1956 ஆம் ஆண்டில் தனது 27 வயதில் வேதியியல் நிரந்த பேராசிரியராகப் பணி புரிந்தார். 1959 ஆம் ஆண்டில், அவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபைசரின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். [3]

இவரது பணிக்காக கோரிக்கு 1988 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் பதக்கம், [4] 1990 இல் வேதியியலுக்கான நோபல் பரிசு, மற்றும் அமெரிக்க வேதியல் குமுகத்தின் மதிப்புமிக்க விருதாக கருதப்படும் பிரீஸ்ட்லி பதக்கம் 2004 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. [5]

விருதுகள் மற்றும் கவுரவங்கள்[தொகு]

லினஸ் பாலிங் விருது (1973), பிராங்க்ளின் பதக்கம் (1978), டெட்ராஹெட்ரான் பரிசு (1983), வேதியியலில் வுல்ஃப் பரிசு (1986), தேசிய அறிவியல் பதக்கம் (1988), ஜப்பான் பரிசு (1989) உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.மேலும் இவர் வேதியியலுக்கான நோபல் பரிசு (1990), ரோஜர் ஆடம்ஸ் விருது (1993), மற்றும் பிரீஸ்ட்லி பதக்கம் (2004). [5] அவர் 1998 இல் ஆல்பா சி சிக்மா ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார். [6] 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (யுகே), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (யுகே) மற்றும் தேசிய சுங் செங் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்து அவருக்கு 19 கவுர முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. [7]

சான்றுகள்[தொகு]

  1. "The Nobel Prize in Chemistry 1990". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
  2. Elias James Corey – Autobiography பரணிடப்பட்டது சூலை 6, 2008 at the வந்தவழி இயந்திரம். nobelprize.org
  3. "Compiled Works of Elias J. Corey, Notes, Pfizer, Celebrating your 80th birthday". http://ejcorey.org/corey/notes/notes.php. பார்த்த நாள்: 2013-11-15. 
  4. National Science Foundation – The President's National Medal of Science பரணிடப்பட்டது அக்டோபர் 15, 2012 at the வந்தவழி இயந்திரம்
  5. 5.0 5.1 See the E.J. Corey, About E.J. Corey, Major Awards tab "Compiled Works of Elias J. Corey". http://ejcorey.org/corey/about/majorawards.html. பார்த்த நாள்: 2013-11-15. 
  6. Fraternity – Awards – Hall of Fame – Alpha Chi Sigma பரணிடப்பட்டது சனவரி 26, 2016 at the வந்தவழி இயந்திரம்
  7. See the E.J. Corey, About E.J. Corey, Honorary Degrees tab"Compiled Works of Elias J. Corey". 2008-07-12. http://ejcorey.org/corey/about/honorarydegress.html. பார்த்த நாள்: 2013-11-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியாஸ்_ஜேம்ஸ்_கோரி&oldid=2892452" இலிருந்து மீள்விக்கப்பட்டது