உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாந்தே அறீனியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாந்தே அறீனியசு (1909)

சுவாந்தே அறீனியசு (Svante August Arrhenius)என்பவர் சுவீடன் நாட்டு இயற்பியலாளர் ஆவார். அடிப்படையில் ஓர் இயற்பியலாளரான இவர் பெரும்பாலும் வேதியியலாளர் என்றே கருதப்பட்டார். இவர் 1859 பெப்ரவரி 19-ல் சுவீடனில் உள்ள உப்சாலா நகரில் பிறந்தார். உப்சலா பல்கலைக்கழகத்திலும், ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1905-ல் நோபல் பரிசு பெற்றார். 1927 அக்டோபர் 2-ல், ஸ்டாக்ஹோம் நகரில் இறந்தார். இவரின் நினைவாக, சமன்பாட்டிற்கும் மற்றும் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. கரைசலில் நிகழும் வேதிவினைகள் எலக்ட்ரான்களுக்கு இடையில் நிகழும் வினைகளே என்று இவர் குறிப்பிட்டார்[1][2][3]. எலக்ட்ரான் பிரிகை தொடர்பான இவருடைய கண்டுபிடிப்பிற்காக 1903 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. Harris, William; Levey, Judith, eds. (1975). The New Columbia Encyclopedia (4th ed.). New York City: Columbia University. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231035-721.
  2. McHenry, Charles, ed. (1992). The New Encyclopædia Britannica. Vol. 1 (15 ed.). Chicago: Encyclopædia Britannica, Inc. p. 587. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 085-229553-7.
  3. Cillispie, Charles, ed. (1970). Dictionary of Scientific Biography (1 ed.). New York City: Charles Scribner's Sons. pp. 296–302. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684101-122.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாந்தே_அறீனியசு&oldid=3582631" இலிருந்து மீள்விக்கப்பட்டது