வில்லியம். ஈ. மோர்னர்
Appearance
வில்லியம் எசுக்கோ மோர்னர் | |
---|---|
பிறப்பு | சூன் 24, 1953 பிளெசன்டன், கலிபோர்னியா, ஐ.அ |
வாழிடம் | அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வேதியியல், செயற்பாட்டு இயற்பியல், உயிரி இயற்பியல் |
பணியிடங்கள் | இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | வாசிங்டன் பல்கலைக்கழகம் - செயின்ட் லூயி, கோர்னெல் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஆல்பெர்ட் ஜே. சீவெர்சு III |
விருதுகள் | வேதியியலில் உல்ஃப் பரிசு (2008) இர்விங் இலாங்மூர் விருது (2009) பீட்டர் டெபை விருது (2013) வேதியியலுக்கான நோபல் பரிசு (2014) |
வில்லியம் எசுக்கோ மோர்னர் (William Esco (W. E.) Moerner, சூன் 24, 1953) அமெரிக்க இயற்பிய வேதியியல் மற்றும் வேதியியல் இயற்பியலாளர் ஆவார். தற்போது உயிரி இயற்பியலிலும் ஒற்றை மூலக்கூறுகளை படமெடுப்பதிலும் ஆய்வு செய்து வருகிறார். முதன்முறையாக ஒளிமூலமாக ஒற்றை மூலக்கூற்றை கண்டறிந்ததற்கும் குறுகிய கட்டங்களில் ஒற்றை மூலக்கூறின் நிறமாலை காட்டி ஆய்விற்காகவும் அறியப்படுகிறார்.[1][2] தற்போது ஒற்றை மூலக்கூறுகளின் ஒளி மூலமான ஆய்வு பரவலாக வேதியியல், இயற்பியல், மற்றும் உயிரியலில் பயன்படுத்தப்படுகின்றது.[3] 2014 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கு எரிக் பெட்சிக், இசுடீபன் எல்லுடன் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.[4]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Reich,Ziv and Kapon,Ruti. 2010. "Foreword by the Guest Editors." (Special Issue dedicated to Prof. Moerner's Achievements.) Israel Journal of Chemistry 49 (3-4), April 2010. DOI: 10.1002/ijch.201090002
- ↑ W. E. Moerner and L. Kador, "Optical Detection and Spectroscopy of Single Molecules in a Solid," Physical Review Letters 62, 2535 (1989). DOI:10.1103/PhysRevLett.62.2535
- ↑ Gräslund, Astrid., Rudolf Rigler, and Jerker Widengren. 2010. "Single Molecule Spectroscopy In Chemistry, Physics and Biology: Nobel Symposium number 138". Springer Series in Chemical Physics, v. 96. Heidelburg [Germany]: Springer, 2010. 572 p. DOI:10.1007/978-3-642-02597-6
- ↑ http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2014/press.pdf