பிரிட்சு ஏபர்
தோற்றம்
| பிரிட்சு ஏபர் | |
|---|---|
| பிறப்பு | டிசம்பர் 9, 1868 பிரெசுலாவு, ஜெர்மனி |
| இறப்பு | 29 சனவரி 1934 (அகவை 65) பாசெல், சுவிச்சர்லாந்து |
| தேசியம் | ஜெர்மானியர் |
| துறை | இயல் வேதியியல் |
| பணியிடங்கள் | ஈடிஎச் சூரிக் கார்ல்சியோ பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | ஹைடல்பெர்க் பல்கலைக்கழகம், ஹம்போல்ட் பல்கலைக்கழகம் பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் |
| ஆய்வு நெறியாளர் | ராபர்ட் பன்சன் |
| அறியப்படுவது | உரங்கள், வெடிமருந்து, ஹேபர் முறை, ஹேபர்-வெய்ஸ் தாக்கம், வேதிப் போர் |
| விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (1918) |
பிரிட்சு ஏபர் (Fritz Haber, டிசம்பர் 9, 1868 - ஜனவரி 29, 1934) ஒரு ஜெர்மானிய வேதியியலாளர்[1]. இவர் 1886 லிருந்து 1891 வரை பெர்லின் பல்கலைக்கழகத்தில் (இன்று ஹம்போல்ட் பல்கலைக்கழகம்) ராபர்ட் பன்சனின் கீழும் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்திலும் படித்தார். இவரின் மனைவி கிளாரா இம்மெர்வாரும் ஒரு வேதியியலாளர். ஹேபர் மேக்சு பார்ன் உடன் இணைந்து பார்ன்-ஹேபர் சுழற்சியைக் கண்டுபிடித்தார். “வேதிப் போர் முறையின் தந்தை” என்றும் அறியப்படுகிறார். அமோனியா வாயுவினை அதன் பகுதிக்கூறு தனிமங்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கும் முறையினைக் கண்டுபிடித்ததற்காக 1918 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""Fritz Haber - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. Retrieved 19 சூலை 2015.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ ""Fritz Haber - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. Retrieved 19 சூலை 2015.
{{cite web}}: Check date values in:|date=(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- பிரிட்சு ஏபர் on Nobelprize.org including the Nobel Lecture, 2 June 1920 The Synthesis of Ammonia from Its Elements
- HABER – A biographical film about Fritz Haber
- A short biography of Fritz Haber, by Bretislav Friedrich
- Fritz Haber, Encyclopædia Britannica
- "How do you solve a problem like Fritz Haber" on NPR's Radiolab
- Fritz Haber: Jewish chemist whose work led to Zyklon B
- Termination of Employment Letter to Ladislaus Farkas from Fritz Haber
- Chlorine nitrogen and the legacies of Fritz Haber
- The Man Who Killed Millions and Saved Billions
