பெஞ்சமின் இலிசுத்து
பெஞ்சமின் லிஸ்ட் Benjamin List | |
---|---|
![]() | |
பிறப்பு | 11 சனவரி 1968 பிராங்க்ஃபுர்ட், மேற்கு செருமனி (இன்றைய செருமனி) |
பணியிடங்கள் | கோலோன் பல்கலைக்கழகம் மேக்சு பிளாங்கு ஆய்வுக்கழகம் ஒக்கைடோ பல்கலைக்கழகம் |
கல்வி | பெர்லின் சுதந்திரப் பல்கலைக்கழகம் (முதுநிலை) பிராங்க்புர்ட் கியோத்தி பல்கலைக்கழகம் (முனைவர்) |
ஆய்வேடு | (1997) |
ஆய்வு நெறியாளர் | யொகான் முல்சர் |
விருதுகள் | கோட்பிரீடு வில்லெம் லைப்னிட்சு பரிசு (2016) வேதியியலுக்கான நோபல் பரிசு (2021) |
பெஞ்சமின் இலிசுத்து (Benjamin List, பெஞ்சமின் லிஸ்ட், பிறப்பு: 11 சனவரி 1968), செருமானிய வேதியியலாளரும், கோலோன் பல்கலைக்கழகத்தின் கரிம வேதியியல் பேராசிரியரும், மாக்சு பிளாங்கு நிலக்கரி ஆய்வுக்கழகத்தின் பணிப்பாளரும் ஆவார். வேதி எதிர்வினைகளைத் துரிதப்படுத்தி அவற்றை அதிக செயல்திறன் மிக்கதான கரிம-வினையூக்கிகளை அவர் இணைந்து உருவாக்கினார். இவர் 2021 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை "சமச்சீரற்ற கரிமவினையூக்கிகளின் உருவாக்கத்திற்காக" டேவிட் மேக்மிலனுடன் பகிர்ந்து கொண்டார். [1]
பின்னணி[தொகு]
அறிவியலாளர்களையும், கலைஞர்களையும் கொண்ட மேல்-நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிராங்க்ஃபுர்ட் நகரில் பிறந்தவவர் பெஞ்சமின் லிசுட்.[2] இவ்ரது பூட்டனார்கள் இதய-மருத்துவர் பிரான்சு வோலார்டு, வேதியியலாளர் யாக்கோபு வோலார்டு ஆவர்.[3] இவரது சிற்றன்னை 1995 இல் மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்ற கிறித்தியான் நூசிலைன்-வோலார்டு ஆவார்.[2][4] இவரது 3-வது அகவையிலேயே, பெற்றோர்கள் இருவரும் மணமுறிவைப் பெற்றனர்.[3]
பணியும் ஆய்வும்[தொகு]
பெஞ்சமின் லிஸ்ட் 1993 இல் பெர்லின் சுதந்திரப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, 1997 இல் பிராங்க்ஃபுர்ட் கோத்தி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வறிக்கைக்கு வைட்டமின் பி 12 செமிகோரின்களின் தொகுப்புமுறை தயாரிப்பை எடுத்துக் கொண்டார்.[5][6][7][8] அதன் பின்னர் அமெரிக்காவின் லா ஜொல்லாவில் உள்ள இசுக்ரிப்சு ஆய்வு நிறுவனத்தில் மூலக்கூற்று உயிரியல் துறையில் ரிச்சர்ட் லெர்னரின் குழுவில் 1997 முதல் 1998 வரை அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட் அறக்கட்டளையின் உதவித்தொகையுடனும்,[3] 1999 முதல் 2003 வரை உதவி பேராசிரியராகவும் பணியாற்றினார்.[9][10]
2003-இல் செருமனி திரும்பி, நிலக்கரி ஆய்வுக்கான மேக்ஸ் பிளாங்க் கல்விக்கழகத்தில் குழுத் தலைவராகப் பணியாற்றினார். 2005 இல் அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக, ஒருபடித்தான வினைவேகமாற்றம் சார்ந்த துறைக்கு தலைமை வகித்தார்.[3][11] அவர் 2012 முதல் 2014 வரை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார்.[12] 2004 முதல் கொலோன் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியலின் பேராசிரியராக பகுதிநேரப் பதவியிலும் இருந்துள்ளார்.[9][10] 2018 முதல் ஒக்கைடோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் எதிர்வினை வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புக்கான பகுதியின் முதன்மை ஆய்வாளராகவும் இருந்து வருகிறார்.[13][14] பெஞ்சமின் லிஸ்ட் 'சின்லெட்' என்ற அறிவியல் இதழின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.[15]

இவர் கரிம வினைவேகமாற்றவியலின் நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இந்தத் துறை உலோகமல்லாத, நொதியல்லாத வினையூக்கிகளைப் பயன்படுத்துகிறது. [16] குறிப்பாக, உதவிப் பேராசிரியராக இருந்தபோது அமினோ அமிலம் புரோலினை திறன் வாய்ந்த சீர்மையற்ற வினையூக்கியாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைக் கண்டுபிடித்தார்.[16] [17] இது மூலக்கூறுகளுக்குள் நடைபெறும் ஆல்டால் வேதிவினைகளில் நடைபெறுகிறது. இதில் இரண்டு வெவ்வேறு மூலக்கூறுகளிலிருந்து கரிம அணுக்கள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு, புரோலினால் தூண்டப்படுகிறது.[16][17][18] இந்த மேம்பாடானது, ஆஜோசு-பாரிசு-ஈடர்-சாவர்-வைச்சர்ட் வினையை அடிப்படையாகக் கொண்டது.[19][20] இதைத் தொடர்ந்து, இவர் முதல் புரோலின்-வினையூக்கம் செய்யப்பட்ட மேனிச், மைக்கேல் மற்றும் α- அமைனேற்றம் வேதிவினைகளை உருவாக்கினார்.[21] இவர் சமச்சீர் தன்மையற்ற பொருள்களால் தூண்டப்பட்ட வினையூக்கத்தைக் கண்டறிந்தார். (குறிப்பாக சமச்சீரற்ற எதிர்-எதிர்மின்அயனி இயக்கிய வினையூக்கம், ACDC).[22][23] இவர் துணிகளின் கரிம-வினையூக்கத்தின் புதிய முறைகளையும் உருவாக்கினார்.[24]
2021 அக்டோபர் 6 அன்று, பெஞ்சமின் லிஸ்டுக்கு "சமச்சீரற்ற கரிமவினையூக்கிகளின் உருவாக்கத்திற்காக" டேவிட் மேக்மிலனுடன் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1] இந்த வினையூக்கிகளின் உருவாக்கம் மருந்தியல் ஆய்வு, மருந்துகளின் உற்பத்தி, மற்றும் "வேதியியலைப் பசுமையாக்கல்" ஆகிய துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[25]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
1999 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முனைவர் சபின் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியோ, பால் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.[26] [27] இவர்கள் அனைவரும் 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பம் மற்றும் ஆழிப்பேரலையில் இருந்து தப்பியிருந்தனர்.[28]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "The Nobel Prize in Chemistry 2021" (in en-US). https://www.nobelprize.org/prizes/chemistry/2021/list/facts/.
- ↑ 2.0 2.1 "Nobelpreis für Nüsslein-Volhards Neffen". Tagblatt.de. https://www.tagblatt.de/Nachrichten/Nobelpreis-fuer-Nuesslein-Volhards-Neffen-519710.html.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Pietschmann, Catarina (6 October 2021). "A Perspective for Life". https://www.mpg.de/17662734/potrait-benjamin-list.
- ↑ "Nobelpreis an Deutschen für Revolution in der Chemie". Morgenpost. https://www.morgenpost.de/web-wissen/article233512243/Nobelpreis-an-Deutschen-fuer-Revolution-in-der-Chemie.html.
- ↑ இணையக் கணினி நூலக மையம் 613569311
- ↑ Mulzer, Johann; List, Benjamin; Bats, Jan W. (1 June 1997). "Stereocontrolled Synthesis of a Nonracemic Vitamin B12 A−B-Semicorrin". Journal of the American Chemical Society (American Chemical Society (ACS)) 119 (24): 5512–5518. doi:10.1021/ja9700515. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863.
- ↑ "Benjamin List, H. C. Brown lecture". https://www.chem.purdue.edu/hcbrownlectures/2019/List%20web%20bio_2.pdf. பார்த்த நாள்: 6 October 2021.
- ↑ Benjamin List, Direktor am Max-Planck-Institut für Kohlenforschung, erhält ERC Advanced Grant des Europäischen Forschungsrates
- ↑ 9.0 9.1 "List, Benjamin". 23 September 2021. https://www.mpg.de/390103/kohlenforschung-list.
- ↑ 10.0 10.1 "Vita Prof. List". 10 May 2021. https://www.kofo.mpg.de/en/research/homogeneous-catalysis/vita.
- ↑ "Board of Directors". Max Planck Institute for Coal Research. http://www.kofo.mpg.de/en/institute/board-of-directors.
- ↑ "Benjamin List". Purdue University. https://www.chem.purdue.edu/hcbrownlectures/2019/List%20web%20bio_2.pdf.
- ↑ "ICReDD Principal Investigator, Prof. Benjamin List won the Nobel Prize in Chemistry 2021!! Huge congratulations!!". 6 October 2021. https://www.icredd.hokudai.ac.jp/ja/news/6093.
- ↑ "LIST, Benjamin". 23 December 2020. https://www.icredd.hokudai.ac.jp/list-benjamin.
- ↑ List, Benjamin (30 May 2017). "Crowd-based peer review can be good and fast". Nature 546 (7656): 9. doi:10.1038/546009a. பப்மெட்:28569830. Bibcode: 2017Natur.546....9L.
- ↑ 16.0 16.1 16.2 "DFG gratuliert Benjamin List zum Nobelpreis für Chemie" (in de). https://www.dfg.de/service/presse/pressemitteilungen/2021/pressemitteilung_nr_41/index.html.
- ↑ 17.0 17.1 List, Lerner & Barbas 2000.
- ↑ Castelvecchi, Davide; Stoye, Emma (6 October 2021). "'Elegant' catalysts that tell left from right scoop chemistry Nobel". Nature (Springer Science and Business Media LLC). doi:10.1038/d41586-021-02704-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:34616090.
- ↑ List, Benjamin (2002). "Proline-catalyzed asymmetric reactions". Tetrahedron (Elsevier BV) 58 (28): 5573–5590. doi:10.1016/s0040-4020(02)00516-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-4020.
- ↑ Hajos, Zoltan G.; Parrish, David R. (1974). "Asymmetric synthesis of bicyclic intermediates of natural product chemistry". The Journal of Organic Chemistry (American Chemical Society (ACS)) 39 (12): 1615–1621. doi:10.1021/jo00925a003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263.
- ↑ List, Benjamin (1 December 2007). "Introduction: Organocatalysis". Chemical Reviews (American Chemical Society (ACS)) 107 (12): 5413–5415. doi:10.1021/cr078412e. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2665.
- ↑ Mayer & List 2006.
- ↑ Mahlau & List 2012.
- ↑ Lee et al. Gutmann.
- ↑ Dörhöfer, Pamela (6 October 2021). "Chemie-Nobelpreis für "geniales Werkzeug"" (in de). Frankfurter Rundschau. https://www.fr.de/wissen/chemie-nobelpreis-2021-benjamin-list-gewinner-frankfurt-davidn-macmillan-news-91036264.html.
- ↑ Harmsen, Torsten (6 October 2021). "Ehemaliger Berliner Student Benjamin List gewinnt Chemie-Nobelpreis" (in de). https://www.berliner-zeitung.de/zukunft-technologie/ehemaliger-berliner-student-benjamin-list-erhaelt-den-chemie-nobelpreis-li.187187.
- ↑ "The Nobel Prize in Chemistry 2021, Benjamin List Interview". 6 October 2021. https://www.nobelprize.org/prizes/chemistry/2021/list/interview/.
- ↑ "Benjamin List: Der Nobelpreisträger, der den Tsunami überlebte". WDR. https://www1.wdr.de/nachrichten/chemie-nobelpreis-geht-an-muelheimer-forscher-list-100.html.
வெளி இணைப்புகள்[தொகு]
- பெஞ்சமின் இலிசுத்து on Nobelprize.org