உள்ளடக்கத்துக்குச் செல்

அமைனேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைனேற்றம் (Amination) என்பது கரிமச் சேர்மத்தில் ஒர் அமீன் குழுவைச் சேர்க்கின்ற செயல் முறையாகும். நம் அன்றாட வாழ்க்கையில் கரிமநைட்ரசன் சேர்மங்கள் ஏராளாமாக பயன்படுத்தப்படுவதால் இவ்வினைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

இவ்வினையை நிகழ்த்துகின்ற நொதிகள் அமைனேசுகள் எனப்படுகின்றன. அமோனியா அல்லது ஆல்க்கைலேற்ற அமீன், குறைவு அமைனேற்றம் மற்றும் மான்னிச் வினை போன்ற வினைகள் உட்பட பல வழிகளில் அமைனேற்றம் நிகழ்கிறது. உதாரணமாக, -COOH -> -CONH2. அமில {வினையூக்கிகள் முன்னிலையில் ஆல்ககால்களை அமைனேற்றம் செய்து தொழிற்சாலைகளில் பல ஆல்கைல் அமீன்கள் தயாரிக்கப்படுகின்றன.[1]

மின்னணுநாட்ட அமைனேற்ற வினையில் அமைன் ஒரு மின்னணு மிகுபொருளாகவும் வினையில் பங்கேற்கும் கரிமச் சேர்மம் மின்னணு கவரியாகவும் செயல்படுகின்றன. ஆக்சாசிரிடின்கள், ஐதராக்சிலமைன்கள், ஆக்சைம்கள் மற்றும் N–O அடிமூலக்கூற்று தளப்பொருட்கள் போன்ற சில எலக்ட்ரான் குறைவு அமீன்கள் பங்கேற்கும் போது இவ்வினை தலைகீழாக நிகழ்கிறது. எலக்ட்ரான் கவரியாக அமீன் பயன்படுத்தப்பட்டால் அவ்வினை மின்னணு அமைனேற்ற வினை என அழைக்கப்படுகிறது. கார்பனயன் மற்றும் ஈனோலேட்டு போன்ற மிகை எலக்ட்ரான் கரிம வேதியியல் தளப்பொருட்கள் இச்செயல்முறையில் மின்னணு மிகு பொருட்களாகப் பயன்படுகின்றன.

ஐதரோவமைனேற்ற வினைகளில் அமீன்கள் ஆல்க்கீன்களுடன் சேர்க்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Karsten Eller, Erhard Henkes, Roland Rossbacher, Hartmut Höke "Amines, Aliphatic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a02_001
  2. Liangbin Huang, Matthias Arndt, Käthe Gooßen, Heinrich Heydt, and Lukas J. Gooßen "Late Transition Metal-Catalyzed Hydroamination and Hydroamidation" Chem. Rev., 2015, 115 (7), pp 2596–2697. எஆசு:10.1021/cr300389u
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைனேற்றம்&oldid=2747437" இலிருந்து மீள்விக்கப்பட்டது