ஒக்கைடோ பல்கலைக்கழகம்
ஒக்கைடோ பல்கலைக்கழகம் | |
---|---|
北海道大学 | |
![]() | |
குறிக்கோள்: | Boys, Be Ambitious |
நிறுவல்: | ஆரம்பம் மார்ச் 1876, பட்டயம் ஏப்ரல் 1, 1918 |
வகை: | தேசிய பல்கலைக்கழகம் |
நிதி உதவி: | 83.6 பில்லியன் யென் |
அதிபர்: | மட்சுடோ நகமுரா |
ஆசிரியர்கள்: | 4,021 |
இளநிலை மாணவர்: | 17,677 |
முதுநிலை மாணவர்: | 3,396 |
முனைவர்பட்ட மாணவர்: | 2,384 |
அமைவிடம்: | சப்போரோ, ஒக்கைடோ, யப்பான் |
வளாகம்: | 3 சதுர கிலோமீட்டர் |
இணையத்தளம்: | www.hokudai.ac.jp |
ஒக்கைடோ பல்கலைக்கழகம் (யப்பானிய மொழி:北海道大学) யாப்பானிலுள்ள முன்னணித் தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது சப்போரோ நகரின் மத்தியில் அமைந்துள்ளது. ஒக்கைடோ பல்கலைக்கழகம் 1876 இல் சப்போரோ விவசாயக் கல்லூரியாக அமெரிக்கரான வில்லியம் கிளார்க் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் 24 மாணவர்களையும் 6 விரிவுரையாளர்களையும் கொண்டிருந்தது. இது 1918 ஏப்ரல் முதலாம் நாள், யப்பானின் 9 அரச பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது. 1919 இல் மருத்துவ பீடம் நிறுவப்பட்டதோடு விவசாயக் கல்லூரி விவசாய பீடமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் பல பீடங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடக்கப்பட்டு, 2006இல் மொத்தமாக 12 பீடங்களைக் கொண்டுள்ளது. 2004 முதல் யப்பானின் தேசிய பல்கலைக்கழகக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ் நிதி தொடர்பாக தன்னாட்சியை கொண்டிருந்தாலும் யப்பான் கல்வி, கலாச்சார, விளையாட்டு, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு முக்கிய அதிகாரத்தை செலுத்தி வருகின்றது.
ஆதாரங்கள்[தொகு]
- ஒக்கைடோ பல்கலைக்கழக வெளியீடு. (மார்ச், 2005) Handbook for International Students
வெளியிணைப்புகள்[தொகு]
- ஒக்கைடோ பல்கலைக்கழக தளம் (ஆங்கில மொழியில்)
- ஒக்கைடோ பல்கலைக்கழக வெளிநாட்டு மாணவர் அமைப்பு (ஆங்கில மொழியில்)