ஓட்டோ வாலெக்

ஓட்டோ வாலெக் (Otto Wallach மார்ச் 27, 1847 - பிப்ரவரி 26, 1931) என்பவர் வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்ற செர்மானிய அறிவியல் அறிஞர் ஆவார்.
பிறப்பும் கல்வியும்
[தொகு]1847 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் நாள் பிரசியாவின் கோனிசுபர்க் நகரில் பிறந்தவர் ஓட்டோ வாலெக். போட்சுடானில் சிம்னாசியம் பள்ளியில் படித்தார். இலக்கியமும் கலை வரலாறும் பள்ளியில் கற்றுத்தரப்பட்டது. இவற்றில் ஓட்டோ வாலெக் அதிக ஆர்வம் காட்டினார். தன்னார்வத்துடன் வீட்டில் வேதியியல் பயின்று பரிசோதனைகள் செய்தார்.
டொலுயீன் ஐசோமெர் குறித்து ஆராய்ச்சி செய்த ஓட்டோ வாலெக் கோட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் 22 ஆவது வயதில் முனைவர் பட்டம் பெற்றார்.
பணியும் விருதும்
[தொகு]டர்பீன் அண்ட் கேம்பர் என்ற நூலை எழுதியுள்ளார். கொழுப்பு வட்டக் கலவை என்ற அலிசைக்ளிக் கூட்டுப் பொருள் ஆராய்ச்சிகளுக்கும் கரிம வேதியியலில் இவரின் பங்களிப்புக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு ஓட்டோ வாலெக்கிற்கு 1910 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[1]
இறப்பு
[தொகு]கடைசி வரை பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த ஓட்டோ வாலெக் 1931 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் நாள் மறைந்தார்.[2] [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "otto wallach biography". the famous people. 10 சூன் 2016. Retrieved 23 சூலை 2017.
- ↑ "நோபல் பெற்ற ஜெர்மனி வேதியியலாளர்". தி இந்து. 27 மார்ச்சு 2017. Retrieved 23 சூலை 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "OTTO WALLACH". BRITANNICA. 2017. Retrieved 23 சூலை 2017.
வெளியிணைப்புகள்
[தொகு]- Nobel Lecture Alicyclic Compounds from Nobelprize.org website
- Biography Biography from Nobelprize.org website
- Otto Wallach at the NNDB website.