தாவீது கார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் கார்டு
David Card
2021 இல் கார்டு
பிறப்பு1956 (அகவை 66–67)
கெல்ஃப், ஒண்டாரியோ, கனடா
நிறுவனம்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
துறைதொழிற் பொருளியல்
பயின்றகம்கின்சுடன் குயின்சு பல்கலைக்கழகம் (BA)
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (MA, முனைவர்)
விருதுகள்யோன் பேட்சு கிளார்க் பதக்கம் (1995)
பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2021)
ஆய்வுக் கட்டுரைகள்

தாவீது எட்வர்டு கார்டு (David Edward Card, பிறப்பு: 1956) என்பவர் கனடிய-அமெரிக்க தொழிலாளர் பொருளியலாளரும் and professor of economics at the கலிபோர்னியா பல்கலைக்கழகப் பொருளியல் பேராசிரியரும் ஆவார். இவருக்கு "தொழிலாளர் பொருளாதாரத்தில் அவரது அனுபவப் பங்களிப்புகளுக்காக" 2021-ஆம் ஆண்டிற்கான பொருளியலுக்கான நோபல் பரிசின் அரைப் பகுதியும், மீதம் யோசுவா அங்கிரித்து, குவீதோ இம்பென்சு ஆகியோருக்குப் பகிர்ந்தும் அளிக்கப்பட்டது.[1][2]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

டேவிட் கார்டு கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் 1956 இல் பிறந்தார்.[3] இவரது பெற்றோர் பால் பண்ணை விவசாயிகள் ஆவர்.[4] கார்டு தனது இளங்கலைப் பட்டத்தை 1978 இல் குயின்சு பல்கலைக்கழகத்திலும், 1983 இல் "நீண்ட கால தொழிலாளர் ஒப்பந்தங்களில் குறியீடுகள்" என்பதில் ஆய்வு செய்து பொருளியலில் முனைவர் பட்டத்தை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக் கொண்டார்.[5]

டேவிட் கார்டு தனது பணியை சிக்காகோ பல்கலைக்கழகம் வணிகப் பள்ளியில் துணைப் பேராசியராக ஆரம்பித்தார். இரண்டாண்டுகளின் பின்னர் 1983 முதல் 1997 வரை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும், பின்னர் பெர்க்லியிலும் பணியாற்றினார். 1990 முதல் 1991 வரை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரிகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.[6] 1988 முதல் 1992 வரை "தொழிற் பொருளியல் இதழில்" துணை ஆசிரியராகவும், 1993 முதல் 1997 வரை, "எக்கொனொமெட்ரிக்கா" இதழில் துணை ஆசிரியராகவும், 2002 முதல் 2005 வரை "அமெரிக்கன் எக்கொனொமிக் ரிவ்யூ" பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவீது_கார்டு&oldid=3811781" இருந்து மீள்விக்கப்பட்டது