பவுல் பெர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால் பெர்க் அல்லது பவுல் பெர்க் (Paul Berg) (பிறப்பு ஜூன் 30, 1926) ஒரு அமெரிக்க உயிர் வேதியியலாளரும் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எமரிட்டஸ் பேராசிரியரும் ஆவார் . வால்டர் கில்பர்ட் மற்றும் ஃபிரடெரிக் சாங்கர் ஆகியோருடன் சேர்ந்து 1980 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர். [1] [2] [3] நியூக்ளிக் அமிலங்கள் சம்பந்தப்பட்ட அடிப்படை ஆராய்ச்சியில் இவர்களின் பங்களிப்பை இந்த விருது அங்கீகரித்துள்ளது. பெர்க் தனது இளங்கலை கல்வியை பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பெற்றார். அங்கு இவர் உயிர் வேதியியலில் தேர்ச்சி பெற்றார். பின்னர் 1952 ஆம் ஆண்டில் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். பெர்க் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றினார். மேலும் பெக்மேன் மூலக்கூறு மற்றும் மரபணு மருத்துவ மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். நோபல் பரிசினையும் தவிர்த்து கூடுதலாக, பெர்க்கிற்கு 1983 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் பதக்கம் மற்றும் 1986 ஆம் ஆண்டில் தேசிய மருத்துவப் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன. பெர்க் அணு விஞ்ஞானிகளின் தகவலேட்டின் புரவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார். [4]

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

பெர்க் நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் ஒரு ரஷ்ய யூத குடியேறிய தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், [5]  சாரா ப்ராட்ஸ்கி, ஒரு இல்லத்தரசி மற்றும் ஹாரி பெர்க், ஒரு ஆடை உற்பத்தியாளர். [6] பெர்க் 1943 இல் ஆபிரகாம் லிங்கன் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார், 1948 இல் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். 1952 ஆம் ஆண்டில் கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆராய்ச்சி மற்றும் தொழில்[தொகு]

கல்விப் பதவிகள்[தொகு]

தனது பட்டப் படிப்பை முடித்த பிறகு, பெர்க் இரண்டு ஆண்டுகள் (1952-1954) <i>அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியில்</i> முதுகலை ஆசிரியராக இருந்தார். டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள சைட்டோபிசியாலஜி நிறுவனம் மற்றும் <i>வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின்</i> ஆகியவற்றில் பணிபுரிந்தார். மேலும் 1954 ஆம் ஆண்டில் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினில் நுண்ணுயிரியல் துறையில் புற்றுநோய் ஆராய்ச்சியில் அறிஞராக தனது கூடுதல் நேரத்தை செலவிட்டார். [1] இவர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது ஆர்தர் கோர்ன்பெர்க்குடன் பணிபுரிந்தார். [6] கேம்பிரிட்ஜில் உள்ள கிளேர் ஹாலில் பெர்க் ஒரு ஆராய்ச்சிக் குழுவினருடன் இணைந்து பணிபுரிந்தார். [7] இவர் 1955 முதல் 1959 வரை <i>வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினில்</i> பேராசிரியராக இருந்தார். 1959 ஆம் ஆண்டிற்குப் பிறகு, பெர்க் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், அங்கு இவர் 1959 முதல் 2000 வரை உயிர்வேதியியல் கற்பித்தார் மற்றும் 1985 முதல் [1] 2000 வரை மூலக்கூறு மற்றும் மரபணு மருத்துவத்திற்கான பெக்மேன் மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் அவர் தனது நிர்வாக மற்றும் ஆசிரியர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றார், தொடர்ந்து ஆராய்ச்சியில் தீவிரமாக இருந்தார்.

நோபல் பரிசு[தொகு]

1980 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசில் ஒரு பாதி பெர்க்கிற்கு வழங்கப்பட்டது, மற்ற பாதி வால்டர் கில்பர்ட் மற்றும் ஃபிரடெரிக் சாங்கர் ஆகியோரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. பெர்க் "நியூக்ளிக் அமிலங்களின் உயிர்வேதியியல் பற்றிய அவரது அடிப்படை ஆய்வுகளுக்காகவும், குறிப்பாக டி. என். ஏ மறுசீரமைப்பு தொடர்பான இவரது பணிகளுக்காகவும்" அங்கீகரிக்கப்பட்டார், அதே சமயம் சாங்கர் மற்றும் கில்பர்ட் "நியூக்ளிக் அமிலங்களில் அடிப்படை வரிசைகளை தீர்மானிப்பதில் அவர்களின் பங்களிப்புகளுக்காக" கௌரவிக்கப்பட்டனர். [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Curriculum Vitae - Paul Berg". Nobelprize.org. 7 February 2005. 7 February 2005 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 April 2022 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "nobelcv" defined multiple times with different content
  2. "Autobiography - Paul Berg". Nobelprize.org. 4 March 2006. 4 March 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
  3. Berg interview பரணிடப்பட்டது 2005-04-18 at the வந்தவழி இயந்திரம் from the Nobel Prize website
  4. "Guide to the Paul Berg Papers". www.oac.cdlib.org. 22 October 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Professor Paul Berg | Biographical summary". WhatisBiotechnology.org (ஆங்கிலம்). 2019-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  6. 6.0 6.1 "HowStuffWorks "Paul Berg"". Science.howstuffworks.com. 21 October 2008. 20 May 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 April 2014 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "stuffbio" defined multiple times with different content
  7. "Research Focus – Clare Hall". www.clarehall.cam.ac.uk.
  8. "The Nobel Prize in Chemistry 1980". The Nobel Foundation. 2011-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-03-25 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_பெர்க்&oldid=3453427" இருந்து மீள்விக்கப்பட்டது