புரூக்ளின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புரூக்ளின்
டச்சு: Breukelen
புரூக்ளின், நியூயார்க்
நியூயார்க் நகர பரோ
கிங்சு கவுன்ட்டி
புரூக்ளின் பாலத்தின் தோற்றம்
புரூக்ளின்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் புரூக்ளின்
சின்னம்
குறிக்கோளுரை: Eendraght Maeckt Maght
(ஒற்றுமையே வலிமை)
புரூக்ளினின் அமைவிடம் - ஆரஞ்சு வண்ணத்தில்
புரூக்ளினின் அமைவிடம் - ஆரஞ்சு வண்ணத்தில்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் நியூ யோர்க் மாநிலம்
கவுன்ட்டிFlag of Borough of Brooklyn.png கிங்சு
நகரம்Flag of New York City.svg நியூயார்க் நகரம்
குடியேற்றம்1634
Named forபிரூகெலன், நெதர்லாந்து
அரசு
 • வகைநியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்
 • பரோ தலைவர்எரிக் ஆடம்சு (ம)
(புரூக்ளின் பரோ)
 • மாவட்ட வழக்குரைஞர்கென்னத் பி. தாம்சன்
(கிங்சு கவுன்ட்டி)
பரப்பளவு
 • மொத்தம்251.0 km2 (96.90 sq mi)
 • நிலம்182.9 km2 (70.61 sq mi)
 • நீர்68.1 km2 (26.29 sq mi)
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்25,92,149[1]
 • அடர்த்தி14,182/km2 (36,732/sq mi)
சிப் முன்னொட்டு112
தொலைபேசி குறியீடு347, 718, 917,929
இணையதளம்www.Brooklyn-USA.org

புரூக்ளின் (Brooklyn, /ˈbrʊklɪn/) ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் ஐந்து பரோக்களில் மிகக் கூடுதலான மக்கள்தொகை கொண்ட பரோவாகும்; இங்கு ஏறத்தாழ 2.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.[1]
பரப்பளவில் இது நியூயார்க் நகரத்தின் இரண்டாவது பெரிய பரோவாகும். 1896 இலிருந்து புரூக்ளினின் எல்லைகளும் கிங்சு கவுன்ட்டியின் எல்லைகளும் ஒன்றாக உள்ளன. கிங்சு கவுன்ட்டி நியூயார்க் மாநிலத்தின் அனைத்துக் கவுன்ட்டிகளிலும் மிகுந்த மக்கள்தொகை உடைய கவுன்ட்டியாக விளங்குகிறது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள அனைத்து கவுன்ட்டிகளிலும் மக்கள்நெருக்க மிக்கதாக நியூயார்க் கவுன்ட்டியை (மன்ஹாட்டன்) அடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது.[2]

இங்கு பல இன மக்கள் தனித்தனி பகுதிகளில் (என்கிளேவ்) குடியேறியுள்ளனர். இதனையொட்டியே புரூக்ளினின் குறிக்கோளுரையாக Eendraght Maeckt Maght (ஒற்றுமையே வலிமை) என உள்ளது. இக்குறிக்கோளுரை பரோவின் சின்னத்திலும் கொடிகளிலும் காணப்படுகிறது.[3] புரூக்ளினின் அலுவல்முறை நிறங்கள் நீலமும் பொன்வண்ணமும் ஆகும்.[4]

நியூயார்க்கின் ஐந்து பரோக்கள் கண்ணோட்டம்
ஆட்பகுதி மக்கள்தொகை நிலப் பரப்பளவு
பரோ கவுன்ட்டி 1 சூலை 2013
மதிப்பீடு
சதுர
மைல்கள்
சதுர
கிமீ
மன்ஹாட்டன் நியூ யார்க் 1,626,159 23 59
பிரான்க்சு பிரான்க்சு 1,418,733 42 109
புருக்ளின் கிங்சு 2,592,149 71 183
குயின்சு குயின்சு 2,296,175 109 283
இசுட்டேட்டன் தீவு ரிச்மாண்ட் 472,621 58 151
8,405,837 303 786
19,651,127 47,214 122,284
மூலம்: ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம்[5][6][7]

புவியியல்[தொகு]

புரூக்ளின் நீள் தீவின் மேற்கு முனையில் அமைந்துள்ளது. இதனை மேன்காட்டனிடமிருந்து கிழக்கு ஆறு பிரிக்கிறது. புரூக்ளினின் ஒரே நிலத் தொடர்பு குயின்சுடன் உள்ளது. மற்ற பக்கங்களில் நீரால் சூழப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

புரூக்ளின் நெதர்லாந்திலுள்ள "புரெகெலன்" (Breukelen) என்ற நகரையொட்டி பெயரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் முதன்முதலாக டச்சு மக்களே குடியேறினர். அவர்களுக்கு முன்னதாக அங்கு வாழ்ந்திருந்த அமெரிக்க தொல்குடியினர் இப்பகுதியை லெனேப் என அழைத்தனர். புதிய நெதர்லாந்து குடியேற்றத்தை உருவாக்க முனைந்த டச்சுக்காரர்கள் 1634இல் இங்கு குடியேறினர். புரூக்ளின் தனி நகரமாக வளர்ந்திருந்த நிலையில் 1898இல் பெரிய நியூயார்க் நகரத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட கருத்து வாக்கெடுப்பின்படி நியூயார்க் நகரத்துடன் இணைந்தது. இன்று பல பண்பாடுகளைக் கொண்ட பல்வேறு இனக் குழுக்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

சிறப்புக் கூறுகள்[தொகு]

இங்குள்ள புரூக்ளின் பாலம் மிகவும் புகழ்பெற்றது. புரூக்ளினையும் மேன்காட்டனையும் இணைக்கும் இது கிழக்கு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இருபுறமும் நடைமேடையுடன் உள்ள இந்தப் பாலத்தில் மேன்காட்டன் மற்றும் புரூக்ளினின் அழகியத் தோற்றத்தைக் கண்டவாறே நடப்பதற்கு பல சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். நியூயார்க் நகரத்தின் மிகப்பெரும் பாலம் புரூக்ளினையும் இசுட்டேட்டன் தீவையும் இணைக்கிறது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Kings County (Brooklyn Borough), New York State & County QuickFacts". United States Census Bureau. பார்த்த நாள் March 28, 2014.
  2. "Population, Housing Units, Area, and Density: 2000", ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Retrieved May 11, 2007.
  3. Flags of the World, Brooklyn, New York (U.S.). Retrieved October 10, 2007.
  4. Borough of Brooklyn.blue and gold.
  5. 2013 borough population estimates are taken from the annual database of county population estimates from the U.S. Census Bureau, retrieved on May 13, 2014.
  6. Per the County and City Data Book:2007 (U.S. Census Bureau), Table B-1, Area and Population, retrieved on July 12, 2008, New York County (Manhattan) was the nation's densest-populated county, followed by Kings County (Brooklyn), Bronx County, Queens County and சான் பிரான்சிஸ்கோ.
  7. American Fact Finder (U.S. Census Bureau): New York by County - Table GCT-PH1. Population, Housing Units, Area, and Density: 2000 Data Set: Census 2000 Summary File 1 (SF 1) 100-Percent Data, retrieved on February 6, 2009

பிற தளங்களில்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புரூக்ளின்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூக்ளின்&oldid=2898515" இருந்து மீள்விக்கப்பட்டது