கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய அமெரிக்க நாட்டில் கவுன்ட்டி எனக் குறிப்பிடப்படுவது மாநிலத்தின் கீழ் அடுத்த நிலையிலுள்ள நிர்வாகப் பிரிவு ஆகும். இந்தியாவில் மாவட்டம் எனக் குறிப்பிடப்படுவதற்கு இணையாகும். அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 48இல் கவுன்ட்டி எனக் குறிப்பிடப்படுகின்றன. லூசியானா இத்தகைய நிலப்பிரிவுகளை பாரிசுகள் என்றும் அலாஸ்கா கவுன்ட்டிகளை விடுத்து பரோக்கள் என்றும் அழைக்கின்றன.[1] இவை இரண்டுமே கவுன்ட்டிக்கு இணையானவையே. ஐக்கிய அமெரிக்காவின் கணக்கெடுப்பு வாரியம் நாட்டின் அனைத்து கவுன்ட்டிகளையும் பட்டியலிட்டுள்ளது; ஏப்ரல் 2009இல் ஐக்கிய அமெரிக்காவின் மொத்த கவுன்ட்டிகளின் எண்ணிக்கை 3,481 ஆக இருந்தது.

மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் கவுன்ட்டிகளை மேலும் நகரப்பகுதிகளாக அல்லது ஊர்களாகப் பிரிக்கின்றன. கவுன்ட்டியின் அரசும் நீதிமன்றங்களும் அமைந்துள்ள நகரம் கவுன்ட்டி சீட் எனப்படுகிறது.

சராசரியாக, ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஓர் கவுன்ட்டியின் மக்கள்தொகை ஏறத்தாழ 100,000 ஆக உள்ளது. மிகக் கூடுதலான மக்கள்தொகை உள்ள கவுன்ட்டியாக இலாசு ஏஞ்செலசு கவுன்ட்டி, கலிபோர்னியா உள்ளது. ஏறத்தாழ 9.8 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர். மிகவும் குறைவான மக்கள்தொகை உள்ள கவுன்ட்டியாக லவிங் கவுன்ட்டி, டெக்சாசு உள்ளது; இங்குள்ள 67 நபர்களே வாழ்கின்றனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கவுன்ட்டிகளின் சராசரி எண்ணிக்கை 62 ஆகும். டெலவெயர் மாநிலத்தில் மிகவும் குறைவாக 3 கவுன்ட்டிகளே உள்ளன. டெக்சசில் மிகவும் கூடுதலாக 254 கவுன்ட்டிகள் உள்ளன.[2]

ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள கவுன்ட்டிகளின் எண்ணிக்கை:

[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]