ராபர்ட் பர்ன்ஸ் உட்வர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராபர்ட் பர்ன்ஸ் உட்வார்ட் (அரச கழகம்) (Robert Burns Woodward ஏப்ரல் 10, 1917 - ஜூலை 8, 1979) ஒரு அமெரிக்க கரிம வேதியியலாளர் ஆவார் . இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கரிம வேதியியலாளராக அவர் பரவலாக அறியப்படுகிறார். 1965 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

உட்வார்ட் ஏப்ரல் 10, 1917 இல் மாசசூசெட்ஸின் பாஸ்டனில் பிறந்தார். இவரது தாய் மார்கரெட் பர்ன்ஸ் ஸ்காட்லாந்தில் இருந்து குடியேறினார். இவர் கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் என்பவரின் வழித்தோன்றல் என்று கூறிக்கொண்டார். இவரது தந்தை ஆர்தர் செஸ்டர் உட்வார்ட் ஆவார்.

அவரது தந்தை 1918 ஆம் ஆண்டு 1918 இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவலால் பாதிக்கப்பட்ட நபர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

மிகச் சிறிய வயதிலிருந்தே, உட்வார்ட் ஒரு பொது ஆரம்பப் பள்ளியில் பயின்றபோது வேதியியல் பற்றிய ஆய்வினால் ஈர்க்கப்பட்டார். பின்னர் மாசசூசெட்ஸின் குயின்சியில் உள்ள குயின்சி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1933 ஆம் ஆண்டில், அவர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) சேர்ந்தார்.ஆனால் இவர் கல்வியில் சிறந்து விளங்கவில்லை. சில ஆய்வுகளினால் இவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். எம்ஐடி 1935 இலையுதிர்காலத்தில் மீண்டும் இவர் கல்லூரியில் சேர்ந்தார். மேலும் 1936ஆம் ஆண்டில் அவர் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். ஒரு வருடம் கழித்து, எம்ஐடி அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.

வெளியீடுகள்[தொகு]

அவரது வாழ்நாளில் உட்வார்ட் கிட்டத்தட்ட 200 படைப்புகளை எழுதியுள்ளார் அல்லது இணைந்து எழுதியுள்ளார்.மேலும் அவர் பங்கேற்ற பெரும்பாலான படைப்புகள் அவர் இறந்து சில ஆண்டுகள் வரை வெளியிடப்படவில்லை. இவரின் மேற்பார்வையின் கீழ் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர்.

ராபர்ட் எம். வில்லியம்ஸ் (கொலராடோ மாநிலம்), ஹாரி வாஸ்மேன் (யேல்), யோஷிட்டோ கிஷி (ஹார்வர்ட்), ஸ்டூவர்ட் ஷ்ரைபர் (ஆர்வர்டு), வில்லியம் ஆர். ரூஷ் ( ஸ்கிரிப்ஸ்-புளோரிடா ), ஸ்டீவன் ஏ. பென்னர் ( UF மூலம்), ஜேம்ஸ் டி வெஸ்ட் (மாண்ட்ரீல்), கிறிஸ்டோபர் எஸ் ஃபூட் , கெண்டல் ஹக், கெவின் எம் ஸ்மித் , தாமஸ் ஆர் ஓயே (மினிசோட்டா பல்கலைக்கழகம்), ரொனால்ட் பிரிஸ்லோ (கொலம்பியா பல்கலைக்கழகம் ) மற்றும் டேவிட் டால்பின் (யுபிசி) ஆகிடோர் இவரின் மாணவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவர்.

கவுரவங்கள் மற்றும் விருதுகள்[தொகு]

அவரது பணிக்காக, உட்வார்ட் பல விருதுகள், கவுரவங்கள் மற்றும் கவுரவ முனைவர் பட்டம் பெற்றார். 1965 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. இதில் 1953 இல் தேசிய அறிவியல் அகாதமி உறுப்பினராகத் தேர்வானார். போலராய்டு, ஃபைசர், மெர்க் போன்ற பல நிறுவனங்களுக்கும் ஆலோசகராக இருந்தார்.

கவுரவ பட்டங்கள்[தொகு]

உட்வார்ட் இருபதுக்கும் மேற்பட்ட கவுரவ முனைவர் பட்டங்களையும் [1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

குடும்பம்[தொகு]

1938 இல் அவர் இர்ஜா புல்மேன் என்பவரை மணந்தார். இந்தத் தம்பதிகளுக்கு சிரி அண்ணா (பி. 1939) மற்றும் ஜீன் கிர்ஸ்டன் (பி. 1944) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். 1946 ஆம் ஆண்டில், அவர் யூடோக்ஸியா முல்லர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.அவர் ஒரு கலைஞரும் தொழில்நுட்பவியலாளருமான இவரை போலராய்டு கார்ப்பரேஷனில் சந்தித்தார். 1972 ஆம் ஆண்டு வரை இவர்கள் இணைந்து வாழ்ந்தனர். இந்தத் தம்பதிக்கு கிரிஸ்டல் எலிசபெத் (பி. 1947) எனும் மகளும் எரிக் ரிச்சர்ட் ஆர்தர் (பி. 1953) எனும் மகனும் இருந்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]