யோசுவா அங்கிரித்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யோசுவா அங்கிரித்து
Joshua Angrist
படிமம்:Angrist, Josh Fall2015.jpg
2015 இல் அங்கிரித்து
பிறப்புசெப்டம்பர் 18, 1960 (1960-09-18) (அகவை 61)
கொலம்பஸ் (ஒகையோ), ஐக்கிய அமெரிக்கா
நிறுவனம்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்
துறைபொருளாதாரவியல், உழைப்பு (பொருளியல்)
பயின்றகம்ஓபர்லின் கல்லூரி (BA)
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (MA, PhD)
பங்களிப்புகள்உள்ளூர் சராசரி சிகிச்சை விளைவு
விருதுகள்பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2021)
யோசுவா அங்கிரித்து
கல்விப் பணி
ஆய்வுக் கட்டுரைகள்

யோசுவா அங்கிரித்து (Joshua Angrist, ஜோசுவா அங்கிரிஸ்ட்; பிறப்பு: 18 செப்டம்பர் 1960)[1] அமெரிக்கப் பொருளியலாளரும், மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகப் பொருளியல் பேராசிரியரும் ஆவார்.[2] அங்கிரீத்து, குவீதோ இம்பென்சு ஆகியோருக்கு "காரணத் தொடர்புகளின் பகுப்பாய்விற்கு அவர்களின் முறையான பங்களிப்புகளுக்காக" 2021-ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் பரிசு அரைப் பகுதி பங்கிட்டு வழங்கப்பட்டது. மீதம் தாவீது கார்டு என்பவருக்கு வழங்கப்பட்டது.[3]

யோசுவா அங்கிரித்து தொழிலாளர் பொருளாதாரம்,[4] நகர்ப்புற பொருளாதாரம்,[5] கல்விப் பொருளாதாரம்,[6] ஆகியவற்றில் உலகின் தலைசிறந்த பொருளியல் வல்லுநர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் அமெரிக்காவில் மனித மூலதனம், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றில் ஆய்வு நடத்தும் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தின் பள்ளிச் செயற்றிறன், சமத்துவமின்மை முன்முனைவு அமைப்பின் இணை-நிறுவனரும், இணைப் பணிப்பாளரும் ஆவார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசுவா_அங்கிரித்து&oldid=3297214" இருந்து மீள்விக்கப்பட்டது